கடைசி வரை அவர் இருந்தா நாங்க ஜெயிப்போம்னு நம்பிக்கை இருந்துச்சி – இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னர் ஷனகா மகிழ்ச்சி

Dasun-Shanaka
Advertisement

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது போட்டியின் கடைசி பந்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி கடைசி பந்து வரை ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தது என்றால் அது மிகையல்ல.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி மழை காரணமாக போட்டி 42 ஓவர்கள் என்று குறைக்கப்பட்ட வேளையில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் அடித்தது. பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது துவக்கத்திலிருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

மேலும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல பாட்னர்ஷிப்பையும் அமைத்து வெற்றியை நோக்கி முன்னேறியது. இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு சரிவினை சந்தித்து இருந்தாலும் இலங்கை அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் அசலங்கா 49 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை முடித்து கொடுத்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் கடைசி வரை கண்ட்ரோலுடன் இருந்தோம். இருப்பினும் கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகளை இழக்கும் போது பாகிஸ்தான் அணிக்கும் வெற்றிக்கான வாய்ப்பு ஏற்பட்டது.

- Advertisement -

ஆனால் அசலங்கா களத்தில் இருக்கும் வரை அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் செய்த ஆலோசனையில் இந்திய அணிக்கு எதிராக செய்த தவறை இந்த போட்டியில் செய்யக்கூடாது என்று பேசிக்கொண்டோம். அந்த வகையில் இந்த போட்டியில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை கொடுக்காமல் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை எங்களது அணியின் வீரர்கள் அமைத்தனர்.

இதையும் படிங்க : அவர்மேல் நான் முழு நம்பிக்கை வச்சிருந்தேன்.. ஆனா கடைசில எல்லாம் தப்பா போச்சி – பாபர் அசாம் வருத்தம்

அதேபோன்று குசால் மெண்டிஸ் மற்றும் சதிரா விக்ரமா ஆகியோரது இன்னிங்ஸ் மிகச் சிறப்பாக இருந்தது. இறுதி நேரத்தில் அசலங்காவும் தனது பங்களிப்பினை வழங்க நாங்கள் வெற்றியும் பெற்றுள்ளோம். அடுத்தடுத்து இறுதிப்போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாட காத்திருக்கிறோம் என ஷனகா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement