
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மொத்தம் எட்டு நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அணியானது ஏ பிரிவில் தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடியது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அசத்திய வேளையில் அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
ஏனெனில் முதல் போட்டியின் போது இந்திய அணி பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கொண்டு களமிறங்கி விளையாடியிருந்தது. ஆனால் இந்திய அணிக்கு நிச்சயம் இரண்டாவது முழுநேர வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்று பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.
அதன்காரணமாக அர்ஷ்தீப் சிங் இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இருந்து யாராவது ஒருவர் நீக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கையில் : அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வந்தால் நிச்சயம் இளம் வீரரான திலக் வர்மா தான் வாய்ப்பை இழப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : என் தந்தை செய்த இந்த விடயத்தை மறக்கவே மாட்டேன்.. அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் – சுப்மன் கில் நெகிழ்ச்சி
ஏனெனில் திலக் வர்மாவை தவிர்த்து பிளேயிங் லெவனில் இருக்கும் மற்ற அனைவருமே அவரைவிட சற்று அனுபவ வீரர்களாக இருப்பதால் அவர்களை வெளியேற்றுவது கடினம். அதனால் இளம் வீரரான திலக் வர்மாவே பிளேயிங் லெவனிலிருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.