வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மூன்றாவதாக நடைபெற்ற டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
அதன்படி நேற்று கயானா நகரில் நடைபெற்ற இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 159 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களையும் குவித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடி வரும் 20 வயதான திலக் வர்மா டி20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் தற்போது பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது.
அந்த வகையில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த போட்டிகளில் திலக் வர்மா முறையே 39 மற்றும் 51 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் பிறகு நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் காரணமாக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் முதல் மூன்று போட்டியில் 30 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த திலக் வர்மா ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 67-வது இடத்தில் இருந்து தற்போது தனது சிறப்பான ஆட்டம் காரணமாக 46-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க : ஸ்டம்ப் மைக்கில் அம்பலமான பாண்டியா உண்மை முகம், திலக் வர்மாவை நம்ப வைத்து ஏமாற்றிய பரிதாபம் – புதிய வீடியோவ பாருங்க
அதே வேளையில் டி20 கிரிக்கெட்டில் தற்போதும் முதலிடத்தில் இருக்கும் சூர்யா குமார் யாதவ் யாரும் தொட முடியாதா உச்சத்தில் (907) புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.