இது என்ன ஐ.பி.எல் மேட்ச்சா? அவருக்கு சான்ஸ் கொடுங்க, ரிஷப் பண்ட் – டிகே தேர்வில் இந்தியாவை சாடும் ஜாம்பவான்

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்தியா தன்னுடைய முதலிரண்டு பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்து அசத்தியது. அதனால் 3வது போட்டியில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற்று நாக் அவுட் வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. பெர்த் நகரில் அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

David Miller Hardik Pandya IND vs SA

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா 15, ராகுல் 9, விராட் கோலி 12, தீபக் ஹூடா 0, ஹர்டிக் பாண்டியா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 49/5 என தடுமாறிய இந்தியாவை அபாரமாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (40) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதை துரத்திய தென்னாப்பிரிக்காவும் டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 24/3 என திணறியது. ஆனால் மிடில் ஆர்டரில் நங்கூரத்தை போட்ட ஐடன் மார்க்ரம் 52 (41) ரன்களும் டேவிட் மில்லர் 59* (46) ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர்.

இது பெங்களூரா:
இதனால் அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடிய இந்தியா பேட்டிங்கில் 150 எடுத்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கும். அதற்கு ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு 9வது ஓவரிலேயே களமிறங்கி சூரியகுமாருடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் கடைசி வரை அதிரடியை துவக்காமல் மெதுவாக விளையாடி 6 (15) ரன்களில் அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது.

DInesh Karthik

இதுபோன்ற ஃபினிஷிங் செய்வதற்காகவே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் ஒயிட் வலையில் சிக்கி வெற்றியை தாரை வார்க்க பார்த்தார். மேலும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எளிதான ஸ்டம்பிங்கை கோட்டை விட்ட நிலையில் இப்போட்டியிலும் தோல்விக்கு காரணமாகும் வகையில் சுமாராக செயல்பட்டது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. முன்னதாக 2004இல் அறிமுகமானது முதல் 2019 உலகக்கோப்பை செமி பைனல் உட்பட அழுத்தமான போட்டிகளில் இப்படி சொதப்புவதை வழக்கமாக வைத்திருக்கும் காரணத்தாலேயே தோனியை மிஞ்ச முடியாமல் கேரியரை தொலைத்த அவர் 37 வயதில் ஐபிஎல் தொடரில் போராடி பெற்ற இந்த வாய்ப்பிலும் சுமாராக செயல்படுவது தமிழக கிரிக்கெட் ரசிகர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

அதனால் மிடில் ஆர்டரில் நிலவும் இடது கை பேட்ஸ்மேன்கள் பஞ்சத்தை போக்கும் வகையிலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே அழுத்தமான போட்டிகளில் விளையாடி காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு மீண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் விளையாடாத தினேஷ் கார்த்திக் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவதற்கு இது ஒன்றும் பெங்களூரு கிடையாது என்று விமர்சிக்கும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு வெளிப்படையாக பேசியுள்ளார்.

Sehwag-and-Rishabh-Pant

இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இதை முதல் நாளிலிருந்தே கணக்கில் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளதால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ரிஷப் பண்ட் தெரிந்து வைத்துள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசியாக எப்போது ஆஸ்திரேலியாவில் விளையாடினார்? எப்போது இதுபோன்ற பவுன்ஸ் பிட்ச்சுகளில் மைதானங்களில் விளையாடினார்? இது ஒன்றும் பெங்களூரு பிட்ச் கிடையாது”

- Advertisement -

“அதே சமயம் நேற்றைய போட்டியில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக ரிசப் பண்ட் விளையாடியிருக்க வேண்டும். அதை நான் இன்றும் சொல்கிறேன். ஏனெனில் அவருக்கு இங்கே நிறைய விளையாடிய அனுபவம் உள்ளது. அதிலும் காபா இன்னிங்ஸ் வரலாற்று சிறப்புமிக்கது. இங்கு நான் ஆலோசனைகளை மட்டுமே தெரிவிக்கிறேன். இறுதி முடிவு அணி நிர்வாகத்தின் கையில் உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : முக்கிய நேரத்தில் பீல்டிங்கில் மொத்தமாக சொதப்பிய இந்தியாவின் இரு துருவங்கள் – ரசிகர்கள் அதிருப்தி

தற்போது லேசான காயத்தை சந்தித்த தினேஷ் கார்த்திக் ஃபிட்டாக இருந்தால் மீண்டும் விளையாடலாம். ஆனால் என்னை பொருத்த வரை முதல் போட்டியிலிருந்தே ரிஷப் பண்ட் 11 பேர் அணியில் விளையாயிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement