இம்முறை தெ.ஆ மண்ணில் இந்தியா ஜெய்க்க 65% வாய்ப்பிருக்கு.. முன்னாள் வீரர் சொல்லும் காரணம் என்ன?

Fonie De Villiers
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் இத்தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தொடரையாவது வென்றுள்ள இந்தியா 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

நல்ல சான்ஸ்:
இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்கள் எடுத்து அபாரமாக செயல்பட்ட முகமது ஷமி இத்தொடரில் காயத்தால் விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஷமி காயமடைந்து முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் நல்ல லைன், லென்த்தை பின்பற்றி பந்து வீசக்கூடிய திறமை கொண்ட பவுலர்களாக இருப்பதாக முன்னாள் வீரர் ஃபனி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

எனவே இம்முறை தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இம்முறை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான 65% வாய்ப்புடன் இம்முறை இந்தியா வந்துள்ளது. ஏனெனில் முதல் முறையாக லென்த் மட்டுமல்லாமல் சரியான லைனில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்கள் அவர்களிடம் உள்ளார்கள்”

- Advertisement -

“குறிப்பாக கற்பனையாக 5, 6வது ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். அந்த இடத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு ஓவரில் 4 பந்துகளை வீச வேண்டும். அப்படித்தான் உங்களால் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். இங்கே கடந்த பல வருடங்களாக இந்தியா வந்துள்ளது. ஆனால் அவர்களிடம் ஒரு சிலர் மட்டுமே நல்ல லைனில் வீசுபவர்கள் இருந்தனர். ஆம் தற்போது அவர்களுடைய அணியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய ஷமி இருக்கப் போவதில்லை”

இதையும் படிங்க: மிகப்பெரிய காயத்தை சந்தித்த சூரியகுமார்.. கம்பேக் பற்றிய அறிவிப்பால் 2024 டி20 உ.கோ முன் இந்தியாவுக்கு பின்னடைவு

“ஆனால் சிராஜ் மற்றும் பும்ரா அந்த லைனில் வீசக்கூடியவர்கள். மறுபுறம் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் லெக் ஸ்டம்ப் லைனில் வீசுபவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் தென்னாபிரிக்க அணியில் இருக்கக்கூடிய இளம் பவுலர்கள் வேகமாக ஓடி வரக்கூடியவர்கள். காயத்தால் வெளியேறியுள்ள ரபாடா மட்டுமே அந்த நல்ல லைனில் தொடர்ச்சியாக வீசக்கூடியவர். எனவே இது இந்தியா வெல்வதற்கு வரலாற்றின் மிகச்சிறந்த வாய்ப்பாகும்” என்று கூறினார்.

Advertisement