IND vs AUS : அது நிச்சயமா நடக்கும் ஏன்னா நீங்க 2001 டீம் மாதிரி ஒர்த் இல்ல – ஆஸ்திரேலியாவை எச்சரித்த கங்குலி

Sourav Ganguly Aus
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. அதனால் கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா என்றாலே ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போனவர்கள் என்பதை விட தோற்றாலும் போராடாமல் தோற்காதவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள்.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

ஆனால் இத்தொடரின் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை வைத்த ஆஸ்திரேலியா முதல் போட்டியில் 3வது நாளின் உணவு இடைவெளியில் களமிறங்கி தேநீர் இடைவெளிக்குள் வெறும் 91 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது போல் 2வது போட்டியின் 3வது நாளில் 2 மணி நேரத்தில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்து சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியுள்ளது.

ஒர்த் இல்ல:
அப்படி வாயில் பேசியதை செயலில் காட்டாமல் கொஞ்சமும் போராடாமல் நம்பர் ஒன் அணி என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படாத ஆஸ்திரேலியா தற்போது அந்நாட்டவர்களிடமே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. தற்போதைய நிலைமையில் கடைசி 2 போட்டியில் வென்று குறைந்தபட்சம் தொடரை சமன் செய்து ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் ஆஸ்திரேலியா போராட உள்ளது.

Aus

ஆனால் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் ஆஸ்திரேலியா தடுமாறுவதால் 4 – 0 (4) என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமது தலைமையில் 2001இல் இந்தியா தோற்கடித்த ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை தற்போதைய அணி கொஞ்சம் கூட நெருங்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“3 – 0 அல்ல 4 – 0 (4) என்ற கணக்கில் இந்தியா வெல்வதை இத்தொடரின் முடிவில் நான் பார்ப்பேன். நானும் அதை தான் நினைக்கிறேன். அதை எவ்வாறு ஆஸ்திரேலியா தடுத்து நிறுத்தப் போகிறது என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை. மேலும் தற்போதைய ஆஸ்திரேலிய அணியை வரலாற்றில் இருந்த அணியுடன் நாம் ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும். ஏனெனில் ஸ்டீவ் வாக், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங், ஹைடன், கில்கிறிஸ்ட் போன்ற அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருந்த தரம் தற்போதைய அணியில் இல்லை. ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த வீரர். இருப்பினும் டேவிட் வார்னர் தடுமாறுகிறார். மார்னஸ் லபுஸ்ஷேன் சிறந்த வீரராக இருந்தாலும் இங்குள்ள கால சூழ்நிலைகள் அவருக்கு மிகவும் கடினமானது”

Ganguly

“தற்போதைய அணியை ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிட்டு நாம் தவறு செய்கிறோம். வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு கால சூழ்நிலைகளில் சோதிக்கப்படுகிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல தற்போது அணியில் இருக்கும் ஒரு சில தரமான வீரர்களும் சுமாராக செயல்படும் நிலையில் டேவிட் வார்னர், பட் கமின்ஸ் போன்ற சில முக்கிய வீரர்கள் வெளியேறியது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:IND vs AUS : நீங்க சொல்றது தப்பு. ஆஸ்திரேலிய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய – மைக்கல் கிளார்க்

எனவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா அடுத்த 2 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்று 4 – 0 (4) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் இடத்தை தனதாக்கி ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

Advertisement