IND vs AUS : நீங்க சொல்றது தப்பு. ஆஸ்திரேலிய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய – மைக்கல் கிளார்க்

Clarke
Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த விடயம் ஆஸ்திரேலிய அணியின் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணியானது எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது. மற்றபடி இந்த டெஸ்ட் தொடரை அவர்களால் கைப்பற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமே இந்திய அணி தங்களுக்கு சாதகமான சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் மைதானத்தை அமைத்தது தான் என்று ஆஸ்திரேலியா அணி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர்.

IND vs AUS Siraj SMith

ஆனால் இப்படி இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து விட்டு மைதானத்தை குறை சொல்வது சரியல்ல என்று அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் கிளார்க் ஆஸ்திரேலிய அணி செய்த தவறை சுட்டிக்காட்டி கடிந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : மேத்யூ ஹைடன் மற்றும் மார்க் வாக் ஆகியோர் இந்த தொடரினை வர்ணனை செய்வதற்காக இந்தியாவில் தான் உள்ளனர். அவர்கள் இருவருமே இந்தியாவில் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர்கள். அவர்கள் இருவருமே நன்றாக ஸ்வீப் ஷாட் ஆடுவார்கள். எனவே வலைப்பயிற்சியில் அவர்களின் உதவியை ஆஸ்திரேலிய அணி நாடி இருக்கலாம். அவர்களிடம் ஆலோசனையையும் பெற்று இருக்கலாம்.

இதையும் படிங்க : இவங்கல்லாம் ஒரு ஸ்பின்னரா? ஈஸியா அடிக்கலாம் – ஜடேஜா உள்ளிட்ட 2 இந்திய வீரர்களை மோசமாக விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

இந்தியாவில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் ஆடுவது நல்ல முடிவுதான். ஆனால் அனைத்து பந்துகளையும் அதே யுக்தியுடன் கையாள்வது தவறு. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா இந்த தொடரினை அணுகிய விதம் தான் தவறே தவிர மற்றபடி ஆடுகளங்கள் மீது எந்தஒரு குறையும் இல்லை என்று மைக்கேல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement