இவங்கல்லாம் ஒரு ஸ்பின்னரா? ஈஸியா அடிக்கலாம் – ஜடேஜா உள்ளிட்ட 2 இந்திய வீரர்களை மோசமாக விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

Abdur Rehman
- Advertisement -

அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் வார்த்தை போரில் எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். குறிப்பாக 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 25000+ ரன்களையும் 74 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து தன்னை சாம்பியன் கிரிக்கெட் வீரர் என்று நிரூபித்த விராட் கோலியை விட ஓரிரு வருடங்கள் அதுவும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மார் மார்தட்டி பேசுவது வாடிக்கையாக்கும்.

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் அப்துர் ரஹ்மான் இந்தியாவின் சுழல் பந்து வீச்சு துறையில் முக்கிய வீரர்களாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வென்ற சஹால் ஆகியோரை மோசமாக விமர்சித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதே கிரிக்கெட்டில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்தில் தடுமாறினாலும் நாட்கள் செல்ல செல்ல தனது அனுபவத்தால் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இன்று உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலித்து வருவதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

மோசமான விமர்சனம்:
குறிப்பாக 2019 உலகக் கோப்பைக்கு பின் பேட்டிங்கில் கடினமாக உழைத்து அட்டகாசமாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்து வருகிறார். மறுபுறம் 2016 முதல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகி நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தி வரும் யுஸ்வேன்ற சஹால் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

ஆனால் ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா அப்போதைய கேப்டன் தோனியின் அதிகப்படியான உதவியால் தான் இந்த நிலையை ஏட்டியுள்ளதாக தெரிவிக்கும் அப்துர் ரஹ்மான் பெரும்பாலும் பந்தை சுழற்றாத சஹால் எளிதாக எதிரணி பேட்ஸ்மேன்களால் அடித்து நொறுக்கும் பவுலராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா தனது கேரியரை துவங்கிய போது சுமாரான பரிதாபமான பவுலராக இருந்தார். எம்எஸ் தோனி தலைமையில் தான் அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று பயிற்சிகளை எடுத்து இன்று அவர் நம்பர் ஒன் பவுலராக இருக்கிறார்”

- Advertisement -

“அதே போல் சஹால் ஒரு மோசமான பவுலர். அவரை நீங்கள் எளிதாக அடித்து நொறுக்கலாம். ஏனெனில் அவரது பந்துகளில் எப்போதுமே எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வேகம் அல்லது சுழல் இருக்காது. அதனால் அவர் நீண்ட காலம் விளையாடக்கூடிய ஒரு வீரர் கிடையாது” என்று கூறினார். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் முதல் வாசிம் அக்ரம் வரை உலகின் அனைத்து ஜாம்பவான் வீரர்களுமே ஆரம்ப காலங்களில் தடுமாறி பின்னர் அனுபவத்தால் கடினமாக உழைத்து நட்சத்திரங்களாக உருவெடுத்தவர்கள்.

குறிப்பாக உலகில் பிறக்கும் அனைவருமே பிறக்கும் போதே அனைத்து கலைகளையும் கற்றவர்களாக இருப்பதில்லை. எனவே ஆரம்பத்தில் தடுமாறினாலும் கேப்டனின் ஆதரவுடன் கடினமாக உழைத்து இன்று நம்பர் ஒன் இடத்தை ரவீந்திர ஜடேஜா பிடித்ததில் எந்த தவறுமில்லை. அந்த வகையில் மொத்தமாக 5000+ ரன்கள் 499 விக்கெட்களை எடுத்துள்ள ஜடேஜா வெற்றிகரமாக செயல்பட்டு வருவதைப் போலவே சாஹலும் 200+ விக்கெட்களை எடுத்து நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க:எனக்கே கடுப்பா இருக்கு, பரப்பான டெஸ்டில் காயம் – சிஎஸ்கே அணியிலிருந்து விலகலா? பென் ஸ்டோக்ஸ் பேட்டி

ஆனால் இவர்களை விமர்சிக்கும் அப்துர் ரஹ்மான் வெறும் 129 விக்கெட்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டு 2014லேயே பாகிஸ்தான் அணியில் கழற்றி விடப்பட்டார். எனவே வேலையில்லாமல் தகுதியின்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement