3 ஆவது டெஸ்ட் போட்டி துவங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இது தெரியுமா உங்களுக்கு?

Cape-Town
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது இன்று கேப்டவுன் நகரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

INDvsRSA

இதன் காரணமாக தற்போது இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-0) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி துவங்குவதில் நேரமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் சுமார் 1:30 மணிக்கு துவங்கிய நடைபெற்ற வேளையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மட்டும் அரை மணி நேரம் தாமதமாக 2 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Elgar

இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் போட்டியானது நாளொன்றிற்கு 90 ஓவர்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகு வலி காரணமாக விளையாடாத வேளையில் இன்றைய மூன்றாவது போட்டியில் அவர் விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா விடயத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு திருப்பம் – நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணி இம்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க அருமையான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement