ஹார்டிக் பாண்டியா விடயத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு திருப்பம் – நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Pandya-2
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் மாதம் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே உள்ள 8 அணிகள் உடன் சேர்த்து தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. இதில் புதிதாக இணைந்துள்ள இரு அணிகளும் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே தாங்கள் அணியில் எடுக்க நினைக்கும் 3 வீரர்களை தேர்வு செய்யலாம் என்றும் பி.சி.சி.ஐ அனுமதி வழங்கியுள்ளது.

IPL
IPL Cup

இதன் காரணமாக தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது அணியில் இணைக்க இருக்கும் வீரர்களை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் முக்கிய வீரரான ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவை அகமதாபாத் அணி ஏற்கனவே தேர்வு செய்ய இருப்பதாக நிறைய பேச்சுகள் அடிபட்டு வந்தது.

- Advertisement -

இந்நிலையில் அவரை அணியில் தேர்வு செய்வது மட்டுமின்றி அகமதாபாத் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியால் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மும்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட பாண்டியா மெகா ஏலத்தில் நிச்சயம் பெரிய விலைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pandya 1

ஆனால் தற்போது அவரை ஏலத்திற்கு முன்பாகவே பெரிய தொகை வழங்கி அணியில் எடுக்க நினைக்கும் அஹமதாபாத் நிர்வாகம் அவரையே கேப்டனாக நியமிக்கவும் ஆலோசித்து வருகிறது. அதுமட்டுமின்றி அவருடன் சேர்த்து இஷான் கிஷன் மற்றும் ரஷித் கான் ஆகியோரையும் அணியில் இணைக்க அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் நீக்கப்பட்டாரா? சஹா போட்ட ட்வீட்டால் ஏற்பட்ட திருப்பம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சேர்த்து அந்த அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement