ரிஷப் பண்ட் நீக்கப்பட்டாரா? சஹா போட்ட ட்வீட்டால் ஏற்பட்ட திருப்பம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Saha-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் வகிப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும். ஏற்கனவே 2 ஆவது போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரம் காட்டும்.

INDvsRSA

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று மறைமுகமாக ஒரு தகவல் விருதிமான் சஹா மூலம் பகிரப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தாலும் இதுவரை தான் பயிற்சி செய்யும் புகைப்படங்களையோ, அங்கு இருக்கும் புகைப்படங்களையோ பகிரவில்லை ஆனால் தற்போது இந்த கேப்டன் கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் பேட்டிங் பிராக்டீஸ் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று ஹலோ கேப்டவுன் என்றும் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அவரது இந்த ட்வீட்களால் இந்த போட்டியில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு சஹா விளையாட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் வார்னர் விளையாடப்போகும் அணி எது தெரியுமா? – அவரே அளித்த பதில்

மேலும் இந்த தொடரில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பண்ட் 8, 34, 17, 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். இதன் காரணமாக சஹாவே விளையாடட்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement