ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செமி ஃபைனலுக்கு சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால் செமி ஃபைனலுக்கு சென்று ஃபைனலில் 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதே போல தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் 2, 3வது இடத்தைப் பிடித்து அசத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா தோல்வியில் இருந்து கம்பேக் கொடுத்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 2 வெற்றியும் 3 தோல்வியும் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இப்போவும் சொல்றேன்:
ஏனெனில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்த நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் வரலாற்றில் 8வது முறையாக உலகக் கோப்பையில் தோற்று ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்தது. அதை விட கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தடுமாறி வருகிறது.
அதன் காரணமாக இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்து எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்று பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஃசெமி பைனல், ஃபைனல் உட்பட அடுத்த 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று பாகிஸ்தான் உலகக் கோப்பை வெல்லும் என்று அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே அகமதாபாத் மைதானத்தில் “தில்தில் பாகிஸ்தான்” பாடலை வேண்டுமென்றே ஒலிபரப்பாத இந்தியாவுக்கு ஃபைனலில் வந்து பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்த அவர் மீண்டும் அதே கருத்தை தெரிவித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கடந்த நாள் இரவு எங்களுடைய உடை மாற்றும் அறையில் உலகக் கோப்பையை நாம் வெல்வதற்கு 6 போட்டிகள் இருப்பதாக எங்களுடைய அணியினிரிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: சீனியர்னா சும்மாவா? களமிறங்கிய முதல் போட்டியிலேயே அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய – ஆஞ்சலோ மேத்யூஸ்
“இங்கிருந்து நாங்கள் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற வேண்டும். ஒரு அணியாக எங்களிடம் வெற்றி பெறுவதற்கான 100% திட்டங்கள் இருக்கிறது. அதை நாங்கள் 100% சரியாக செயல்படுத்தினால் ஏன் எங்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்பதற்கான காரணம் எனக்கு தெரியாது. எங்களுடைய அடுத்த போட்டியில் சந்திக்க உள்ள தென்னாப்பிரிக்க அணி நல்ல கிரிக்கெட்டை விளையாடி தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைகளை பின்பற்றி எங்களுடைய திறமையை கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்தினால் எந்த அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை அறிவோம்” என்று கூறினார்.