ஆசியக்கோப்பை : போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? எத்தனை மணிக்கு துவங்கும் – விவரம் இதோ

Asia-Cup
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற விளையாட இருக்கிறது. ஆசிய கண்டத்தினை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என ஆறு முக்கிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

India Dhawan

- Advertisement -

இதனால் இந்த ஆசிய கோப்பை தொடரை கைப்பற்ற போகும் அணி எது என்பதை குறித்து எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேபோன்று இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கே உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

நாளை ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 11-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் மற்றும் நேரம், இடம் போன்ற தகவல்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

Dubai

அதன்படி இந்த ஆசிய கோப்பை தொடருக்கான லீக் போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் என அனைத்துமே இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்கும். அதுமட்டுமின்றி போட்டிகள் அனைத்தும் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இதன் காரணமாக போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் கண்டு களிக்கலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.

இதையும் படிங்க : என்னா மனசுயா, பாகிஸ்தான் ரசிகர்களுக்காக விராட் கோலி செய்த காரியம் – குவியும் பாராட்டுக்கள்

அதோடு டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் இந்த தொடரினை இலவசமாக கண்டுகளிக்கலாம். மேலும் ஆன்லைன் வழியாக போட்டியை கண்டு ரசிப்பவர்கள் ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலம் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement