IND vs ENG : ரோஹித் சர்மாவிடம் இருக்கும் அந்த திறமை விராட் கோலியிடம் இல்லை – பாக் வீரர் வித்யாசமான கருத்து

Rohith-1
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் போற்றப்படுகிறார்கள். கடந்த 10 வருடங்களாக தங்களது அபாரமான பேட்டிங் திறமையால் ஏராளமான ரன்களையும் சதங்களையும் அடித்து பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் இவர்கள் தற்போதைய தேதியில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் வீரர்களாக கொண்டாடப்படுகிறார்கள். இந்த இருவருமே தங்களுக்கென தனித்தனியான திறமைகளையும் ஸ்டைல்களையும் கொண்டு தங்களுக்கே உரித்தான பாணியில் எதிரணிகளை வெளுத்து வாங்குவார்கள்.

Kohli

- Advertisement -

இதில் கடந்த 2008இல் அறிமுகமான விராட் கோலி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரின் இடத்தில் அவரைப் போலவே ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 50+ பேட்டிங் ரன்களை குவித்து வரும் விராட் கோலி உலகின் அனைத்து இடங்களிலும் தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார்.

மறுபுறம் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய ரோகித் சர்மா 2013இல் கேப்டன் தோனியால் தொடக்க வீரராக களமிறங்கிய பின் அந்நியனாக மாறி எதிரணிகளை வெளுத்து வாங்கி விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் உட்பட ஏராளமான சாதனைகளை படைத்து தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார்.

Rohith

விராட் – ரோஹித்:
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவரே சிறந்த பேட்ஸ்மேன் என்று வல்லுநர்கள் போற்றுவார்கள். அந்த வகையில் 2011 ஆரம்பம் முதல் இப்போதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் 2019 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் திண்டாடி வந்த ரோகித் சர்மா ஒரு வழியாக கடந்த 2 வருடங்களாக சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் சதங்களை அடித்து சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளார். இருப்பினும் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்களாக விளையாடும் இவர்கள் எப்போதும் இந்த பாகுபாடு இல்லாமல் நண்பர்களாக இரட்டை குழல் துப்பாக்கிகளாக இந்திய பேட்டிங்கின் தூண்களாக சேர்ந்தே விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் அவர்களது ரசிகர்கள் ரோகித் தான் பெரியவர் விராட் தான் பெரியவர் என்று சமூக வலைதளங்களில் தினம்தோறும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதில் கடந்த 2019க்குப்பின் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் விராட் கோலி கடுமையான விமர்சனங்களை தினந்தோறும் சந்தித்து வருகிறார். மறுபுறம் சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியாமல் ரோகித் சர்மாவும் லேசான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதில் பெரும்பாலான போட்டிகளில் நல்ல தொடக்கத்தை பெறும் ரோஹித் சர்மா அதைப் பெரிய அளவில் மாற்ற முடியாமல் தவிக்கிறார். ஆனால் விராட் கோலி மொத்தமும் சொதப்பலாக சொற்ப ரன்களில் அவுட்டாகி செல்கிறார்.

imam

ரோஹித்தே திறமையானவர்:
இந்நிலையில் விராட் கோலியை விட திறமையில் சற்று உயர்ந்தவராக இருக்கும் ரோகித் சர்மா போட்டியை ஒருசில நிமிடங்களில் மாற்றக்கூடியவர் என்று பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் பாராட்டியுள்ளார். இது பற்றி அந்நாட்டின் தொலைக்காட்சி பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மாவிடம் இருக்கும் திறமை விராட் கோலியிடம் இல்லை என்று நான் கருதுகிறேன். அவர்கள் இருவரும் விளையாடியதை நான் நேரில் பார்த்துள்ளேன். அதில் ரோகித் சர்மா பேட்டிங் செய்வது அவர் ரிப்ளையில் பேட்டிங் செய்வதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. அவரின் பேட்டிங்கில் நிறைய நேரம் உள்ளது”.

Rohit Sharma Six

“சொல்லப்போனால் எனது வாழ்வில் பேட்டிங்கில் டைமிங் என்பதை அவர் பேட்டிங் செய்யும்போது பாயிண்ட் திசையில் நான் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன். அந்த வகையில் விராட் கோலி முன்னின்று அடிப்பவர். ஆனால் ரோகித் சர்மாவுக்கு இயற்கையிலேயே கடவுள் நிறைய நேரத்தை (டைமிங்) பரிசளித்துள்ளார். அவர் போட்டியை ஒருசில நொடிகளில் மாற்றக்கூடிய ஒரு வீரர். அவர் நன்கு செட்டிலாகி விட்டால் அனைத்து பந்துகளையும் அடிப்பார்” என்று வியந்து பாராட்டினார்.

இதையும் படிங்க : IND vs ENG : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

பொதுவாக கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மென் சிறந்து விளங்க நல்ல டைமிங் தேவைப்படும் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். அந்த அம்சம் ரோஹித் சர்மாவிடம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கும் இமாம்-உல்-ஹக் அந்த குறிப்பிட்ட திறமை விராட் கோலியிடம் பெரிய அளவில் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த 2018 ஆசிய கோப்பை மற்றும் 2019 உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதமடித்த போது அதை நேரில் பார்த்து அவரின் அந்த திறமையை உணர்ந்ததாகவும் இமாம்-உல்-ஹக் கூறுகிறார்.

Advertisement