IND vs ENG : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் (2-1) கைப்பற்றிய இந்திய அணியானது இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Rohit and Dhawan

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை இந்திய நேரப்படி ஐந்து முப்பது (5.30) மணி அளவில் துவங்க உள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் கடந்த போட்டியின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியை தவறவிட்ட விராட் கோலி இன்றைய போட்டியில் அணிக்கு திரும்புவாரா? மாட்டாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Shami-1

ஆனால் இதுவரை வெளியான தகவலின் படி முதல் போட்டியில் வெற்றி பெற்ற அதே இந்திய அணிதான் இன்றைய இரண்டாவது போட்டியிலும் விளையாடும் என்பதனால் விராட் கோலிக்கு இன்றைய போட்டியிலும் இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் டாசுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதனை உறுதி செய்தால் மட்டுமே அது இறுதியான அணியாக இருக்கும். அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இப்போலாம் கிரிக்கெட்ல இப்படி நடக்குறதால நான் டீவியை ஆப் பண்ணிடறேன் – அஷ்வின் ஓபன்டாக்

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) முகமது ஷமி, 10) பிரசித் கிருஷ்ணா, 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement