இப்போலாம் கிரிக்கெட்ல இப்படி நடக்குறதால நான் டீவியை ஆப் பண்ணிடறேன் – அஷ்வின் ஓபன்டாக்

ashwin-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகளை பார்க்காமல் டிவியை ஸ்விட்ச் ஆப் செய்து விடுவதாக ஒரு கருத்தினை கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை சுழற்ப்பந்து வீச்சாளராக பயணித்து வரும் அஸ்வின் சமீப காலமாகவே ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முன்னணி வீரராக செயல்பட்டு வரும் அவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டை பார்ப்பதே இல்லை என்றும் தொலைக்காட்சியை சுவிட்ச் ஆப் செய்து விடுவதாகவும் கூறியுள்ள ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ashwin 1

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இரண்டு பந்துகளை பயன்படுத்தும் விதிமுறையை ஐசிசி கொண்டு வந்தது. இந்த விதிமுறை தற்போது ஒருநாள் கிரிக்கெட்டை ஆபத்துக்கு தள்ளியுள்ளது. ஏனெனில் புது பந்தின் மூலம் நன்றாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று பவுலர்கள் நினைத்தாலும் தற்போது இந்த நிலைமை தலைகீழாக மாறி இரண்டு இன்னிங்ஸ்களுமே பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஏதுவாக மாறிவிட்டது.

முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளை பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு பிரிவிற்கும் சரிசமமான வாய்ப்பு என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் இல்லை என்றும் அதனால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது என்றும் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டி20 கிரிக்கெட் வந்ததுக்கு பிறகு தற்போது 50 ஓவர் கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டின் நீண்ட வெர்ஷனாக பார்க்கப்படுகிறது.

ashwin

முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளில் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு பந்துகளை பயன்படுத்துவதால் முதலில் விளையாடும் அணி 350 ரன்களை எடுத்தால் கூட இரண்டாவதாக விளையாடும் அணி எளிதாக 47-வது ஓவரிலேயே துரத்தி வெற்றி பெற்று வருகிறது.

- Advertisement -

ஆனால் ஒரே பந்தை பயன்படுத்தும் போது 60 பந்துகளுக்கு 60 ரன்கள் அடிக்க வேண்டும் நிலை இருந்தால் கூட கையில் 7 விக்கெட் இருந்தாலும் பவுலர்கள் சிறப்பாக பந்துகளை வீசி தங்களது அணிக்கு வெற்றியை பெற்று தருவார்கள். ஆனால் தற்போது உள்ள இந்த இரண்டு புதிய பந்துகள் நடைமுறையில் இது போன்ற வெற்றி சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஒருநாள் போட்டி முழுவதுமே ஒரே பந்தில் நடத்தப்பட்டால்தான் போட்டி இறுதிவரை சென்று சுவாரசியமாக நடைபெறும்.

இதையும் படிங்க : இந்திய வீரர் கே.எல் ராகுலுடன் காதல். திருமண தேதியை – வெளிப்படையாக அறிவித்த பாலிவுட் நடிகை

ஆனால் இரண்டு பந்துகளை பயன்படுத்தும் வேளையில் போட்டி முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே அமைகிறது எனவே இதுகுறித்து ஐசிசி விரைந்து நடவடிக்கை எடுத்து 50 ஓவருக்கும் ஒரே பந்தை பயன்படுத்தும் விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement