இந்திய வீரர் கே.எல் ராகுலுடன் காதல். திருமண தேதியை – வெளிப்படையாக அறிவித்த பாலிவுட் நடிகை

Athiya-Shetty
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலித்து திருமணம் செய்வது இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே பல இந்திய வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலித்து திருமணம் செய்த வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான கே.எல் ராகுலும் நடிகை அதியா ஷெட்டியும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே காதலில் இருந்து வரும் கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பரில் தங்களது காதலை அதிகாரவு பூர்வமாக அறிவித்திருந்தனர்.

- Advertisement -

பொதுவெளியில் அதிகமாக ஒன்றாக சுற்றி திரிவதை தவிர்த்து வந்த ராகுல் மற்றும் அதியா ஜோடி கடந்த சில மாதங்களாகவே ஒன்றாக இணைந்து உலகெங்கும் பயணித்தபடி இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து தொடருக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஜெர்மனியில் சிகிச்சை செய்து கொண்ட கே.எல் ராகுல் அவருடன் தனது காதலியான அதியா ஷெட்டியையும் அழைத்துச் சென்றிருந்தார்.

இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தங்கள் காதல் திருமணம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை ராகுலின் காதலி அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் வெளியிட்டுள்ளார்.

Athiya

அதன்படி ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருந்த அதியா ஷெட்டி “இன்னும் மூன்று மாதங்களில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன்”. என்று பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்னும் மூன்று மாதங்களில் ராகுல் மற்றும் அதியா ஆகியோரது திருமணம் நடக்கப் போகிறதா என்கிற அடிப்படையில் தற்போது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் ஏற்கனவே அதியா ஷெட்டியின் தந்தையும், பிரபல பாலிவுட் நடிகருமான சுனில் ஷெட்டி அவர்கள் இருவரது காதல் குறித்து பேசுகையில் : எனது மகள் தற்போது சரியான வயதை எட்டியுள்ளார். அவர் திருமண வயதை எட்டியதால் அவருடைய சொந்த வாழ்க்கை அவரது விருப்பப்படியே அமையும். அவர் காதல் திருமணம் செய்து கொள்வதில் எந்த ஒரு தடையும் இல்லை என்று ராகுல் மற்றும் அதியா ஆகியோரது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய டாப் 5 ஜோடிகள்

அதேபோன்று ராகுலின் பெற்றோரும் சமீபத்தில் மும்பை சென்று சுனில் செட்டியின் குடும்பத்தை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வெகுவிரைவில் இந்திய வீரர் கே.எல் ராகுல் அதியா ஷெட்டியுடன் திருமண பந்தத்தில் இணைவது உறுதியாகி உள்ளது.

Advertisement