IND vs PAK : ரிசர்வ் டேவான இன்றும் போட்டி மழையால் வாஷ் அவுட்டானால் முடிவு என்ன ஆகும்? – யார் வெற்றியாளர்?

IND-vs-PAK-Asia-Cup
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் போர் சுற்று ஆட்டங்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வேளையில் இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் துவங்கியது.

அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி 24 ஓவர்கள் நிறைவு செய்திருந்த வேளையில் மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது 24.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து நேற்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்பதன் காரணமாக இந்த போட்டி ரிசர்வ் டேவான இன்று செப்டம்பர் 11-ஆம் தேதி தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டி போன்று இன்றும் போட்டி ஆரம்பித்த சில மணி நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்? போட்டியின் முடிவு யாருக்கு சாதகமாக அமையும்? என்பது குறித்து விதிமுறை என்ன சொல்கிறது? என்பதை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் போட்டியாவது நடத்தப்படும். அப்படி அதற்கும் வாய்ப்பில்லை என்றால் இரு அணிகளுக்குமே புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு அந்த கணக்கீடுகளின் அடிப்படையிலேயே அடுத்த சுற்றுக்கு எந்த அணி தகுதி பெறும் என்பது உறுதியாகும். மேலும் இந்த முடிவுகளை நடுவர்களே உறுதி செய்து அறிவிப்பார்கள்.

இதையும் படிங்க : வீடியோ : மழை வந்தத்தால் தப்பிச்சுட்டுட்டோம் இல்லைனா இந்தியா நொறுக்கிருப்பாங்க – ஓப்பனாக பேசிய சோயப் அக்தர் பரிதாப பேட்டி

ஒருவேளை இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டால் இந்திய அணி அடுத்ததாக மோதும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த போட்டி மழையால் வாஷ் அவுட் ஆனால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement