மழை வந்தத்தால் தப்பிச்சிட்டோம் இல்லைனா இந்தியா நொறுக்கிருப்பாங்க – ஓப்பனாக பேசிய சோயப் அக்தர் பரிதாப பேட்டி

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் துவங்கிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இத்தொடரின் லீக் சுற்றில் மோதிய போட்டியும் அனல் பறந்த தருணங்களுக்கு மத்தியில் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போட்டியாவது முழுமையாக நடைபெறுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்களை இம்முறை மிகச்சிறப்பாக எதிர்கொண்ட இந்தியா 24.1 ஓவரில் 147/2 ரன்கள் எடுத்த போது மழை வந்து தடுத்தது.

முன்னதாக இலங்கையின் பல்லக்கேல் நகரில் லீக் சுற்றில் மோதிய போது ஷாஹீன் அப்ரிடியின் மிரட்டலான பந்து வீச்சில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கிளீன் போல்டான நிலையில் ஹரிஷ் ரவூப் வேகத்தில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் திண்டாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா 150 ரன்கள் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் இஷான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 226 ரன்கள் எடுக்க உதவினார்.

- Advertisement -

மழையால் தப்பிச்சுட்டுட்டோம்:
அதனால் இம்முறையும் அதே போல இந்தியாவில் தெறிக்க விடலாம் என்று நினைப்பில் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்ற முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஆனால் இம்முறை சுதாரிப்புடன் செயல்பட்டு ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் ரோஹித் சர்மா 56 (49) ரன்களும் கில் 58 (52) ரன்களும் விளாசி தக்க பதிலடி கொடுத்தனர்.

அதனால் மழை வராமல் போயிருந்தால் நிச்சயமாக இந்த போட்டியில் இந்தியா 300 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் பேட்டிங் அபாரமாக இருந்ததாக தெரிவிக்கும் அக்தர் மழை வந்ததால் பாகிஸ்தான் ஓரளவு தப்பிவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு. “ஹேய் நண்பர்களே. நான் போட்டியை பார்க்க வந்தேன். இருப்பினும் மழையால் இந்திய மற்றும் பாகிஸ்தான் போல நானும் காத்திருந்தேன்”

- Advertisement -

“இன்று மழை நம்மை காப்பாற்றியது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கடந்த போட்டியில் இந்தியாவை மழை காப்பாற்றியது போல் இம்முறை காப்பாற்றியுள்ளது. இருப்பினும் இப்போட்டி நாளை முடிவடையும் என்று நம்புகிறேன். ஆனாலும் இப்போட்டியில் டாஸ் மற்றும் முதலில் பந்து வீசியது சரியான முடிவல்ல” என்று கூறினார். அவரை போலவே கம்ரான் அக்மல் போன்ற மேலும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் டாஸ் வென்று முதலில் பந்து வீசியிருக்கக் கூடாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலைமையில் இன்று மீண்டும் ரிசர்வ் நாளில் போட்டி நடைபெற உள்ளது. ஆனாலும் கொழும்பு நகரில் காலையிலேயே மழை பெய்ய துவங்கியுள்ளதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இரவு 10.26 வரை பாகிஸ்தான் 20 ஓவர்கள் கூட பேட்டிங் செய்வதற்கு மழை வழி விடாமல் போனால் போட்டி ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement