டேவான் கான்வேவிற்கு பதிலாக துவக்க வீரராக விளையாடப்போவது யார்? ஆப்ஷனில் 2 பேர் – தோனியின் முடிவு என்ன?

Conway-and-Dhoni
- Advertisement -

சி.எஸ்.கே அணியின் நட்சத்திர துவக்க வீரரான டேவான் கான்வே கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இதுவரை 23 போட்டிகளில் விளையாடி 48 ரன்கள் சராசரியுடன் 924 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை சென்னை அணிக்காக 9 அரைசதங்கள் அடித்தது மட்டுமின்றி 141 என்கிற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் கூட இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் அவரே வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் நிரந்தர துவக்க வீரராக கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வந்த டேவான் கான்வே இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த அவர் தற்போது டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வேளையில் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது கட்டைவிரலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன் காரணமாக எட்டு வாரங்கள் வரை அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்காரணமாக அவர் மே மாதம் வரை கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டாயம் இந்த ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியாது என்றே தெரிகிறது. அதனால் கான்வேவிற்கு பதிலாக சிஎஸ்கே அணி மாற்று துவக்க வீரரை தேர்வு செய்யதாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி சென்னை அணியில் மாற்று துவக்க வீரராக இடம்பிடிக்க இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

- Advertisement -

அதில் தோனி எதை தேர்வு செய்யப்போகிறார்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒன்று அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடிய அனுபவம் கொண்டவர் எனபதால் அவரை துவக்க வீரராக அனுப்பிவிட்டு அவரது மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவையோ அல்லது அதிரடி ஆட்டக்காரரான டேரல் மிட்சலையோ விளையாட வைக்கலாம்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2024 தொடரில் காயம் காரணமாக டேவான் கான்வே விலகல்.. மீண்டும் திரும்ப வாய்ப்பிருக்கா? – விவரம் இதோ

அப்படி இல்லையெனில் இடது கை துவக்க வீரர் தான் வேண்டுமென்றால் : இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலககோப்பையில் அசத்தலான ஆட்டத்தை விளையாடிய பிறகு மினி ஏலத்தில் வாங்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவை துவக்க வீரராக களமிறக்கலாம். இப்படி இரண்டு ஆப்ஷன்கள் தோனியிடம் உள்ளன. இதில் தோனி எதை தேர்வு செய்யப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் தோனியின் முடிவு சரியாக இருக்கும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement