ஐ.பி.எல் 2024 தொடரில் காயம் காரணமாக டேவான் கான்வே விலகல்.. மீண்டும் திரும்ப வாய்ப்பிருக்கா? – விவரம் இதோ

Conway
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது துவங்க உள்ளது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்க இருக்கிறது. அதன் காரணமாக இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் தற்போது சிஎஸ்கே அணி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் துவங்கும் முன்னரே சிஎஸ்கே அணியின் நட்சத்திர துவக்க வீரரான டேவான் கான்வே ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது கட்டை விரலில் காயம் அடைந்த அவர் அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது மருத்துவ அறிக்கை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டேவான் கான்வேவிற்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கான அறுவை சிகிச்சையை அவசியம் செய்ய வேண்டும் என்றும் அப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் கட்டாய ஓய்வு தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மே மாதம் வரை அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. இதன் காரணமாக டேவான் கான்வே ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகளை தவறவிடுவது உறுதி. மேலும் மே மாதத்தில் அவர் குணமடைந்து வந்தாலும் பிளே ஆப் போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும்.

- Advertisement -

ஆனால் லீக் சுற்று போட்டிகளில் விளையாடாமல் நேராக அவரை பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட வைப்பது என்பது நடக்காத காரியம் எனவே அவர் இந்த ஐபிஎல் தொடருக்கு திரும்ப வாய்ப்பில்லை. எனவே இந்த ஐ.பி.எல் 2024 தொடர் முழுவதையும் டேவான் கான்வே தவறவிடவுள்ளது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டும்மல்ல.. இன்னொரு வீரரும் 100 ஆவது போட்டியில் விளையாட இருக்கிறார் – யார் தெரியுமா?

மேலும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் துவக்கவீரராக விளையாட வைக்க விருப்பப்படுவதால் அவருக்கு முழு ஓய்வு வழங்கி நேரடியாக உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அறிவுரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிஎஸ்கே அணியிலிருந்து கான்வே விலகுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement