ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டும்மல்ல.. இன்னொரு வீரரும் 100 ஆவது போட்டியில் விளையாட இருக்கிறார் – யார் தெரியுமா?

Jonny-Bairstow
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி அதற்கடுத்து மூன்று தோல்விகளை தொடர்ச்சியாக பெற்றது.

இதன் காரணமாக இந்திய அணியிடம் 4 போட்டிகள் முடிவடைந்த வேளையிலேயே மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியானது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளதால் அவருக்கு ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அதே வேளையில் அஸ்வினுடன் சேர்ந்து இந்த போட்டியில் மற்றொரு இங்கிலாந்து வீரரும் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோவும் தான் நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

- Advertisement -

34 வயதான ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து அணிக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் என 5974 ரன்களை குவித்துள்ளார். மேலும் எதிர்வரும் தர்மசாலா டெஸ்ட் போட்டியின் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறு போட்டிகளை பூர்த்தி செய்ய உள்ளார்.

இதையும் படிங்க : தனியாளா 600 ரன்ஸ் அடிப்பாரு.. ஐபிஎல் 2024 தொடரில் அந்த ஜோடி டாப்ல இருப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அந்த நூறாவது போட்டியுடன் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அண்மையில் பரபரப்பான கருத்தினை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement