தனியாளா 600 ரன்ஸ் அடிப்பாரு.. ஐபிஎல் 2024 தொடரில் அந்த ஜோடி டாப்ல இருப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 9
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கான முதற்கட்ட அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் தயாராகியுள்ளன. பொதுவாக ஐபிஎல் போன்ற டி20 தொடரில் வெற்றி பெறுவதற்கு ஓப்பனிங் வீரர்கள் ஆரம்பத்திலேயே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுப்பது அவசியமாகும்.

அந்த வகையில் இம்முறை நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைக்கு கடந்த வருடத்தைப் போலவே ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதே போல மும்பை அணியில் கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ள ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள இஷான் கிசான் ஆகியோர் தங்களுடைய தரத்தை நிரூபிக்க அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

600 ரன்கள் அடிப்பாரு:
இந்நிலையில் அவர்களை விட சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் உள்ள ஜெயிஸ்வால் – ஜோஸ் பட்லர் ஆகியோர் தான் இம்முறை அதிக ரன்கள் குவிக்கும் ஓப்பனிங் ஜோடியாக இருப்பார்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். குறிப்பாக தற்போதைய இங்கிலாந்து தொடரில் 655 ரன்கள் குவித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் தனியாளாக 600 ரன்கள் அடிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ராஜஸ்தான் அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் நல்ல ஓப்பனிங் ஜோடியாக இருப்பதாக நான் கருதுகிறேன். சொல்லப்போனால் அவர்கள் நம்பர் ஒன் ஜோடியாக இருப்பார்கள். ஜெய்ஸ்வாலின் தற்போதைய ஃபார்ம் தான் அதை நான் சொல்வதற்கு முக்கிய காரணம். குறிப்பாக ஜெய்ஸ்வால் இந்த சீசனில் கிட்டத்தட்ட 600 ரன்கள் அடிப்பார்”

- Advertisement -

“தற்போதுள்ள தன்னம்பிக்கையுடன் ஐபிஎல் தொடருக்கு செல்லும் போது கடந்த வருடத்தை விட இம்முறை அவர் வித்தியாசமான லெவலில் பேட்டிங் செய்வார். கடந்த வருடத்தை விட தற்போது அவரிடம் நிறைய முதிர்ச்சி இருக்கிறது. ஜோஸ் பட்லர் கடந்த வருடம் சுமாராக விளையாடினார். ஆனால் கடந்த எஸ்ஏ டி20 தொடரில் அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை உங்களால் எப்படி நீண்ட காலம் அமைதியாக வைத்திருக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இப்படியே போனா தாங்காது.. மொத்த இந்திய வீரர்களும் காயமாகிடுவாங்கா.. பிசிசிஐ’க்கு ஷர்துள் தாகூர் கோரிக்கை

அவர் கூறுவது போல கடந்த ஐபிஎல் தொடரில் அதிவேக அரை சதமடித்து ஆல் டைம் சாதனை படைத்த ஜெய்ஸ்வால் 625 ரன்களை விளாசினார். அதன் காரணமாக இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி இப்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் 2024 ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் அடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement