இப்படியே போனா தாங்காது.. மொத்த இந்திய வீரர்களும் காயமாகிடுவாங்கா.. பிசிசிஐ’க்கு ஷர்துள் தாகூர் கோரிக்கை

Shardul Thakur 3
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் அரையிறுதி போட்டியில் மோதி வருகின்றன. மார்ச் இரண்டாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு சுமாராக விளையாடி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழக அணிக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 43, விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது நாள் முடிவில் 353/9 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணியை விட 207 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. சொல்லப்போனால் முஷீர் கான் 55 ரன்கள் எடுத்ததை தவிர்த்து முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் மும்பை 106/7 என தடுமாறியது.

- Advertisement -

இப்படியே போனா தாங்காது:
ஆனால் அப்போது அபாரமாக பேட்டிங் செய்த சர்துள் தாக்கூர் 13 பவுண்டரி 4 சிக்சருடன் முதல் தர கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து 109 (105) ரன்கள் குவித்து தமிழகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். தமிழ்நாடு சார்பில் இதுவரை அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக இப்போதெல்லாம் 2 – 3 நாட்கள் இடைவெளியில் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நெருக்கமாக நடைபெறுவதாக சர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.

ஆனால் இவ்வளவு நெருக்கமாக அட்டவணை அமைக்கப்பட்டால் இந்தியாவின் அனைத்து மாநில ரஞ்சி அணிகளில் உள்ள வீரர்கள் அதிக காயத்தை சந்திப்பார்கள் என்று தாகூர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அடுத்த வருடம் அட்டவணையை இன்னும் சிறந்த வடிவில் உருவாக்க வேண்டும் என்று பிசிசிஐ’யை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “3 நாட்கள் இடைவெளியில் முதல் தர போட்டிகளை விளையாடுவது எங்களுக்கு சிரமமாக இருக்கிறது”

- Advertisement -

“ரஞ்சிக் கோப்பையில் நான் விளையாடத் துவங்கிய போது முதல் 3 போட்டிக்கு 3 நாட்கள் இடைவெளியும் பின்னர் 4 நாட்கள் இடைவெளியும் இருக்கும். நாக் அவுட் போட்டிகளுக்கு 5 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் இப்போது அனைத்து போட்டிகளும் 3 நாட்கள் இடைவெளியில் நடைபெறுகிறது. அப்படி ஃபைனல் வரை செல்லும் அணி 3 நாட்கள் இடைவெளியில் 10 போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமாகும்”

இதையும் படிங்க: ஜடேஜா மாதிரி பவுலிங் போடுறாரு.. 21ஆம் நூற்றாண்டில் அபாரமான சாதனை படைத்த கிசோரை பாராட்டிய தாகூர்

“எடுத்துக்காட்டாக எங்களுடைய வீரர் மோகித் 5 போட்டியில் விளையாடி 6வது போட்டியில் காயத்தை சந்தித்தார். எனவே அடுத்த வருடம் அதிக இடைவெளி இருக்கும் அளவுக்கு அட்டவணையை வடிவமைக்க அவர்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் இப்படி தொடர்ந்து ஓரிரு வருடங்கள் விளையாடினால் நம்முடைய நாட்டில் உள்ள பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement