ஜடேஜா மாதிரி பவுலிங் போடுறாரு.. 21ஆம் நூற்றாண்டில் அபாரமான சாதனை படைத்த கிசோரை பாராட்டிய தாகூர்

Shardul Thakur 2
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதும் அரையிறுதி போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மார்ச் 2ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சுமாராக செயல்பட்டு வெறும் 146 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 43, விஜய் சங்கர் 44 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது நாள் முடிவில் 353/9 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் தமிழக அணியை விட 207 ரன்கள் முன்னிலை வகிக்கும் மும்பை இப்போட்டியில் வலுவான நிலையில் உள்ளது.

- Advertisement -

ஜடேஜாவை போல:
சொல்லப்போனால் முசீர் கான் 55 ரன்கள் அடித்ததை தவிர்த்து பிரிதிவி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் ரகானே போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் 106/7 என மும்பை தடுமாறியது. ஆனால் அப்போது அபாரமாக விளையாடிய சர்துல் தாகூர் முதல் முறையாக சதமடித்து 13 பவுண்டரி 4 சிக்சருடன் 109 (105) ரன்கள் குவித்து மும்பையை காப்பாற்றினார்.

அதன் காரணமாக கேப்டன் சாய் கிஷோர் முழுமூச்சுடன் போராடி 6 விக்கெட்டுகள் எடுத்தும் தமிழ்நாடு அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்த வருடம் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசி வரும் சாய் கிஷோர் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 53* விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதன் வாயிலாக ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த 3வது தமிழக வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

- Advertisement -

குறிப்பாக 21ஆம் நூற்றாண்டில் ஒரு ரஞ்சிக் கோப்பை தொடரில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த தமிழக வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1972ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் வெங்கட்ராமன் 58 விக்கெட்டுகளும் 1999ஆம் ஆண்டு ஆசிஸ் கபூர் 50 விக்கெட்டுகளும் தமிழ்நாடு அணிக்காக எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் தமிழ்க வீரர் அஷ்வினுக்கு – அளிக்கப்படவுள்ள மரியாதை

அப்படி தங்களுக்கு பெரிய சவாலை கொடுக்கும் சாய் கிஷோர் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை போல் பந்து வீசுவதாக சர்துள் தாக்கூர் பாராட்டியுள்ளார். இது பற்றி இரண்டாவது நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “சாய் நன்றாக பந்து வீசுகிறார். நீண்ட நாட்கள் கழித்து ரவீந்திர ஜடேஜாவுக்கு பின் ஒரு தரமான இடது கை ஸ்பின்னர் பந்து வீசுவதை நான் ரஞ்சிக் கோப்பையில் பார்க்கிறேன்” என்று கூறினார்.

Advertisement