100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் தமிழ்க வீரர் அஷ்வினுக்கு – அளிக்கப்படவுள்ள மரியாதை

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டியானது மார்ச் 7-ம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இந்திய அணியின் நட்சத்திர வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான ரவிச்சந்திரன் அஸ்வினின் 100-ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளதால் ரசிகர்கள் அவரை வாழ்த்த காத்திருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

மேலும் 37 வயதாகும் இவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையை கூட நெருங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சில மரியாதைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் எப்பொழுதுமே 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு சிறப்பு நினைவு பரிசை வழங்கி கௌரவிக்கும் அணி நிர்வாகம் கட்டாயம் தர்மசாலா கிரிக்கெட் சங்கம் சார்பாக ஒரு சிறப்பு நினைவு பரிசை வழங்கி அதையும் ஒரு ஜாம்பவான் கையால் வழங்க வைக்கும். அதோடு பி.சி.சி.ஐ சார்பாகவும் அவருக்கு விருது மைதானத்திலேயே வழங்கப்படும். அவரது நூறாவது டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு கேப் வழங்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : அதை யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது.. ஸ்ரேயாஸை நீக்கியது தப்பு.. ஆதாரத்துடன் பிசிசிஐ’யை விமர்சித்த கவாஸ்கர்

மேலும் நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்திற்கு செல்லும் போது இந்திய அணியின் வீரர்கள் அவரை அரணமைத்து வரவேற்பார்கள். இப்படி பல மரியாதைகள் அவருக்கு கிடைக்க உள்ளது. அதேபோன்று இத்தனை ஆண்டுகால இந்திய கிரிக்கெட்டில் முதல் தமிழக வீரராக இவர் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரலாறு நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement