அதை யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது.. ஸ்ரேயாஸை நீக்கியது தப்பு.. ஆதாரத்துடன் பிசிசிஐ’யை விமர்சித்த கவாஸ்கர்

Sunil Gavaskar 23
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 மதிய சம்பள ஒப்பந்தப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகிய 2 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது தமிழ்நாடு அணிக்கு எதிராக நடைபெறும் ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் மும்பைக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் கடைசி வரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத இஷான் கிசான் ஐபிஎல் 2024 டி20 தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் லேசான காயத்தை சந்தித்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள என்சிஏவுக்கு சென்ற அவரிடம் ஒரு வாரம் கழித்து சோதனை நடத்தப்பட்டது.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அதில் மேற்கொண்டு புதிய காயத்தை சந்திக்காத ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு ஃபிட்டாக இருப்பதாக பிசிசிஐ’க்கு என்சிஏ மெயில் அனுப்பியது. ஆனால் அப்போது தமக்கு லேசான முதுகு வலி இருப்பதாக சொன்ன ஸ்ரேயாஸ் ஐயர் பரோடாவுக்கு எதிராக நடந்த ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மும்பைக்காக விளையாடவில்லை. அந்த வகையில் காயமில்லை என்று என்சிஏ உறுதிப்படுத்தியும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடத் தவறிய காரணத்தாலேயே ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் ஒரு வீரருக்குள் காயத்தின் வலி எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எந்த பயிற்சியாளராலும் கண்டுபிடிக்க முடியாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்சிஏ பயிற்சியாளர் சொல்லி விட்டார் என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ தவறான நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சிக்கும் கவாஸ்கர் இது பற்றி மிட்-டே இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ஸ்ரேயாஸ் ஐயர் காலிறுதியில் விளையாடவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் முதுகு வலியால் தம்மால் விளையாட முடியாது என்பதை அவர் தெளிவாக இந்திய அணி நிர்வாகத்திடம் சொல்லி விட்டார். ஆனால் அவர் ஃபிட்டாகி விளையாட தயாராக இருப்பதாக என்சிஏ பயிற்சியாளர்கள் சான்றிதழ் வழங்கினர். அதுவே ஸ்ரேயாஸ்க்கு எதிராக சென்றது போல் தெரிகிறது. ஆனால் உண்மையாக ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது”

இதையும் படிங்க: 100 மேட்ச் போதும்.. 101வது போட்டியில் அவரை ட்ராப் பண்ணிடுங்க.. நட்சத்திர வீரரை விமர்சித்த மைக்கேல் வாகன்

“இன்னும் ஜார்கண்ட் அணிக்காக ஏன் இஷான் கிசான் விளையாடவில்லை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் மும்பைக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாகவும் அவர் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு எப்போதும் மறுப்பு தெரிவித்ததாக தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement