100 மேட்ச் போதும்.. 101வது போட்டியில் அவரை ட்ராப் பண்ணிடுங்க.. நட்சத்திர வீரரை விமர்சித்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan 23
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் முடிய உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி மார்ச் 7ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் துவங்க உள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

100 போட்டி போதும்:
ஆச்சரியப்படும் வகையில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோவும் அன்றைய நாளில் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளார். ஆனால் இந்த தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இங்கிலாந்தின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்த பேர்ஸ்டோ 100வது போட்டியிலும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்றால் 101வது போட்டியில் நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

இது பற்றி டெலிகிராஃப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தரம்சாலாவில் ஜானி பேர்ஸ்டோ தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நெகிழ்ச்சியின் ஒரு பெரிய வெற்றியாகும். உணர்வின் அடிப்படையில் கூட 99 போட்டிகளில் விளையாடிய நீங்கள் 100வது போட்டியில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“இருப்பினும் நீங்கள் 101வது போட்டியை தவற விடுவதிலிருந்து தப்ப முடியாது. அவர் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் போதுமான அளவுக்கு நன்றாக செயல்படவில்லை. குறிப்பாக இந்தியாவில் அசத்தவில்லை. அதே போல பென் ஃபோக்ஸ் இந்தியாவில் விக்கெட் கீப்பிங் செய்வதில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அதிரடியாக விளையாட நினைக்கும் இங்கிலாந்து அணிக்கு அவருடைய பேட்டிங் பொருத்தமாக இல்லை என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கு வந்த ராசி.. பவுலிங் மற்றும் பேட்டிங்ன்னு பட்டையை கிளப்பிய ஷர்துல் தாகூர் வெறியாட்டம் – விவரம் இதோ

“கடந்த போட்டி அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. பேட்ஸ்மேனுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த அவரால் டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. அந்த வகையில் அவருடைய கீப்பிங் நன்றாக இருந்தாலும் பேட்டிங் போதுமான அளவுக்கு இல்லை” என்று கூறினார். இதனால் தன்னுடைய 100வது போட்டியில் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜானி பேர்ஸ்டோ களமிறங்க உள்ளார்.

Advertisement