
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான தொடராக இருந்து வருகிறது. இந்த ஆண்டு அண்மையில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கைப்பற்றி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்த ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மெகாளத்திற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகத்தின் விதிமுறைப்படி வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள்.
தக்கவைக்கப்படும் சில வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்தில் கலந்து கொள்வார்கள். அந்த மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்று தற்போதே அனைத்து அணிகளும் திட்டம் திட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனிக்கு சரியான மாற்றுவீரரை தேர்வு செய்ய தயாராகி வருகிறது.
ஏனெனில் தற்போது 43 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? என்பது யாருக்கும் தெரியாது. எனவே அவருக்கு சரியான மாற்றுவீரரை தேர்வு செய்யும் முனைப்புடன் தற்போது சிஎஸ்கே நிர்வாகம் திட்டங்களை தீட்டி வருகிறது.
அந்த வகையில் தோனிக்கு மாற்றுவீரராக துருவ் ஜுரேலை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பின் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட கூடியவர்.
இதையும் படிங்க : 188 சேசிங்.. 6, 0, 6, 6, 6.. ஒரே ஓவரில் டு பிளேஸிஸ் அணியின் வெற்றியை பறித்த பொல்லார்ட்
இப்படி விக்கெட் கீப்பிங் மற்றும் தோனியை போன்று பினிஷராக களமிறங்கும் அவரை சென்னை அணிந்து கொண்டு வந்தால் அது மிகச் சிறப்பான தேர்வாக அமையும் என்பதனாலே அவரை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் துருவ் ஜுரேலுக்கு அதிகப்படியான தொகையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் சில கோடிகளிலேயே அவரை வாங்கிவிடலாம் என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.