188 சேசிங்.. 6, 0, 6, 6, 6.. ஒரே ஓவரில் டு பிளேஸிஸ் அணியின் வெற்றியை பறித்த பொல்லார்ட்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸில் 2024 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 10ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் 12வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ட்ரின்பாகோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய செயிண்ட் லூசியா அணிக்கு அதிரடியாக விளையாடிய ஜான்சன் சார்லஸை 29 (14) ரன்களில் அவுட்டாக்கிய சுனில் நரேன் அடுத்து வந்த டேஸ்கர்ட்டேவை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் டு பிளேஸிஸ் 34 (26) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

188 ரன்கள் சேசிங்:

இருப்பினும் மிடில் ஆர்டரில் பனுக்கா ராஜபக்சா 33 (29) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து மிடில் ஆர்டரில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஸ்டன் சேஸ் அரை சதமடித்து 56* (40) ரன்கள் குவித்தார். இறுதியில் டிம் சைபர்ட் 11 (4), மேத்தியூ போர்ட்ஜ் 11 (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் செயின்ட் லூசியா 187-6 ரன்கள் குவித்தது. ட்ரின்பாகோ சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 2, வக்கார் சலாம்கெல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து 188 ரன்களை துரத்திய ட்ரின்பாகோ அணிக்கு துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 16, சுனில் நரேன் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஷேக்கெர் பாரிஸ் அரை சதமடித்து 57 (33) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் மீண்டும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் 17 (22), கேசி கார்ட்டி 15 (22) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

மிரட்டிய பொல்லார்ட்:

இருப்பினும் அப்போது களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். அதனால் வெற்றியை நெருங்கிய ட்ரின்பாகோ அணிக்கு கடைசி 2 ஓவரில் அணிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது மேத்தியூ போர்ட்ஜ் வீசிய 19வது ஓவரில் 0, 6, 0, 6, 6, 6 என அதிரடியாக 4 சிக்ஸர்களை பறக்க விட்ட பொல்லார்ட் 52* (19) ரன்களை 273.68 ஸ்ட்ரைக் ரேட்டில் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: விராட் கோலியை விட ரோஹித் சர்மா இந்த விடயத்தில் பெஸ்ட்.. அதை நான் பாத்திருக்கேன் – முன்னாள் பாக் வீரர் பேட்டி

அடுத்த ஓவரின் முதல் பந்தில் அகில் ஹொசைன் பவுண்டரியுடன் 5* (4) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 189-6 ரன்கள் எடுத்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ஒரே ஓவரில் 24 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் நூர் அகமது, மேத்தியூ போர்ட்ஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் செயின்ட் லூசியா தோற்றது.

Advertisement