வெறும் 1 ரன்.. கோபம் வந்துட்டா போதுமா? வாழ்வா – சாவா போட்டியில் பாபர் அசாம் செய்த வேலையை.. விளாசும் ரசிகர்கள்

Babar Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது. அதில் ஜனவரி 18ஆம் தேதி புகழ்பெற்ற காபா மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் வென்றால் மட்டுமே குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் களமிறங்கிய சிட்னி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து விளையாடிய பிரிஸ்பேன் 20 ஓவரில் போராடி 171/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நாதன் மெக்ஸ்வினி 69* (54), மைக்கேல் நீசர் 35 (14) ரன்கள் எடுத்தார்கள். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய சிட்னிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட் மிட்சேல் ஸ்டார்க் 4, சாம் கரண் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

வாழ்வா – சவால் போட்டியிலும்:

அடுத்ததாக விளையாடிய சிட்னி அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் வழக்கம் போல அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுபுறம் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இத்தொடரில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி வரும் அவருக்கு கடந்த போட்டியில் 11வது ஓவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட ஸ்மித் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை.

குறிப்பாக பிக்பேஷ் தொடரில் 12வது ஓவருக்கு பவர்சர்ஜ் எனும் சிறப்பம்சம் இருக்கிறது. எனவே அந்த ஓவரில் பாபர் அசாமால் அதிரடியாக விளையாட முடியாது என்று நினைத்த ஸ்மித் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் 12வது ஓவரை தாமே எதிர்கொண்டார். அதற்காக பாபர் அசாம் அதிருப்தியை வெளிப்படுத்திய போதிலும் ரியான் ஹாட்லி வீசிய 12வது ஓவரில் 6, 6, 6, 6, 4, 2 என 32 ரன்களை தெறிக்க விட்ட ஸ்மித் தம்முடைய முடிவை சரியென்று நிரூபித்தார்.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்:

ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையாமல் தம்மை அவமானப்படுத்தியதாக நினைத்த பாபர் அசாம் வெறுப்புடன் விளையாடி அடுத்த ஓவரில் போல்ட்டாகி சென்றார். அப்போது ஸ்மித் மேலிருந்த கோபத்தில் அவர் பௌண்டரி எல்லையை பேட்டால் அடித்து விட்டு சென்றது சர்ச்சையானது. அதனால் இப்போட்டியில் கோபத்துடன் கொந்தளித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 7 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன்னில் அவுட்டாகி மிகவும் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: 219 ரன்ஸ்.. இந்தியாவுக்கு எதிராக வரலாறு காணாத படைத்த நியூசிலாந்து ஜோடி.. புதிய 2 சாதனை

இருப்பினும் கடந்தப் போட்டியை போலவே இப்போட்டியிலும் அசத்திய ஸ்மித் 54 (40) ரன்கள் எடுத்தார். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் கேப்டன் ஹென்றிக்ஸ் 24 (20), சாம் கரண் அட்டகாசமான 53* (27) ரன்கள் விளாசினர். அதனால் 18.4 ஓவரில் 177/5 ரன்களை எடுத்த சிட்னி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று குவாலிபயர் சுற்றுக்கு சென்றது. ஆனால் வாழ்வா – சாவா போட்டியிலும் சொதப்பிய பாபர் அசாமை “கோபப்பட்டால் மட்டும் போதாது” என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement