அடிப்பதற்குள் விடிஞ்சுரும் போலயே.. சிட்னி காலை வாரிய பாபர் அசாம்.. அம்பயரை விளாசும் பாக் ரசிகர்கள்

Babar Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த பெர்த் – சிட்னி அணிகள் மோதிய குவாலிபயர் 1 பிளே ஆஃப் போட்டி ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெர்த் 20 ஓவரில் 147/9 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஃபின் ஆலன் 49, கேப்டன் அஸ்டன் டர்னர் 29, ஜே ரிச்சர்ட்சன் 20 ரன்கள் எடுத்தனர். சிட்னிக்கு அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ், பென் டவார்சுய்ஸ், மிட்சேல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய சிட்னி அணிக்கு பாபர் அசாம் ஆட்டத்தை துவங்கினார்.

- Advertisement -

காலை வாரிய பாபர்:

ஆனால் கூப்பர் கோன்லி வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலயே ஸ்டம்பிங் முறையில் அவர் சில்வர் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இம்முறை பிக்பேஷ் தொடரில் முதல் முறையாக சிட்னிக்காக விளையாடும் அவர் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடினார். பெரும்பாலான போட்டிகளில் டெஸ்ட் போல விளையாடிய அவர் லீக் சுற்றில் 10 இன்னிங்ஸில் 202 ரன்களை 103.06 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.

அப்படி மெதுவாக விளையாடும் அவருக்கு ஒரு போட்டியில் 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்காத ஸ்மித் ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை. அதற்காக கோபப்பட்ட பாபர் அசாம் தம்முடைய பேட்டால் பௌண்டரி எல்லையை அடித்தது சர்ச்சையானது. அந்த கோபத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடந்த போட்டியில் ஒரு ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

அடிப்பதற்குள் விடிஞ்சுரும்:

அந்த நிலையில் குவாலிபயர் 1 போட்டியில் டக் அவுட்டான பாபர் அசாம் சிட்னியை காலை வாரினார் என்றே சொல்லலாம். மறுபுறம் அதை குறை சொல்லாத பாகிஸ்தான் ரசிகர்கள் பாபர் அசாம் கால் எல்லை கோட்டுக்குள் இருந்ததால் தவறாக அவுட் கொடுத்த அம்பையரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். அதைப் பார்க்கும் மற்ற ரசிகர்கள் பெய்ல்ஸ் நீக்கப்படும் போது பாபர் அசாமின் கால் காற்றிலிருந்தது தெரிந்தும் சப்பைக் கட்டு கட்டிய பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: இது டென்னிஸ் இல்ல.. ஃபார்முக்கு வர அதை நான் மாற்றவும் விரும்பல.. இந்திய அணியே முக்கியம்.. சூரியகுமார் ஓப்பன்டாக்

அத்துடன் “உங்களுடைய பாபர் அசாம் அடிப்பதற்குள் பிக்பேஷ் தொடரே முடிந்து விடிந்து விடும் போல” என்றும் எதிரணி ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மோசமாக விளையாடிய சிட்னி 15 ஓவரில் 99 ரன்களுக்கு தோற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களை எடுத்தார். இந்த தோல்வியால் சிட்னி அணி எலிமினேட்டரில் விளையாட தகுதி பெற்றது. மறுபுறம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு நேரடியாக சென்ற பெர்த்துக்கு அதிகபட்சமாக மஹ்லி பியர்ட்மேன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement