4க்கு 4.. தெ.ஆ’வில் சிஎஸ்கே பெயரை காப்பாற்றும் ஜேஎஸ்கே.. 2010 போல கடைசி போட்டியில் அபாரமாக தகுதி

JSK team
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் 2025/26 எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் முதல் 3 போட்டிகளில் வென்ற போதிலும் அடுத்த 6 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அந்த 6 போட்டிகளில் ஜேஎஸ்கே அணி 4 தோல்விகளை சந்தித்த நிலையில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

இறுதியாக ஜேஎஸ்கே தங்களது கடைசியில் லீக் போட்டியில் ஜனவரி 19ஆம் தேதி பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. பார்ல் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கிய ஜேஎஸ்கே டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேஎஸ்கே 20 ஓவரில் போராடி 166/5 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அசத்திய ஜேஎஸ்கே:

அதிகபட்சமாக நெய்ல் டிம்மர்ஸ் 39, டு பிளாய் 54*, மேத்தியூ டீ வில்லியர்ஸ் 27, மைக்கேல்-கெய்ல் பெப்பர் 27 ரன்கள் எடுத்தனர். பார்ல் ராயல்ஸ் அணிக்கு அதிகபட்சமாக வக்கார் சலாம்கெய்ல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ராயல்ஸ் அணியை சிறப்பாக பந்து வீசிய ஜேஎஸ்கே பவுலர்கள் 18.1 ஓவரில் வெறும் 122 ரன்களுக்கு சுருட்டி வீசினார்கள்.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டிரே பிரிட்டோரியஸ் 32, டான் லாரன்ஸ் 45, ரூபின் ஹெர்மன் 14 ரன்களை எடுத்தார்கள். ஜேஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக பிரேம்னேலன் சுப்ராயன் 3, நன்ரே பர்கர் 2, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜேஎஸ்கே அணி போனஸ் புள்ளிகளையும் பெற்றது.

- Advertisement -

சிஎஸ்கே வழியில் ஜேஎஸ்கே:

அதன் காரணமாக 10 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளைப் பெற்ற ஜேஎஸ்கே 22 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. 2010 ஐபிஎல் தொடரில் இதே போல கடைசி போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே 4வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதே போல தற்போது தென்னாப்பிரிக்காவிலும் சிஎஸ்கே அணியின் கிளையான ஜேஎஸ்கே அணி வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வைக் கண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: 38 ரன்ஸ்.. ஒரே பார்ட்னர்ஷிப்பால் வெ.இஸை முடித்த ஆப்கானிஸ்தான்.. 2026 டி20 உ.கோ ஃபார்முக்கு வந்து மிரட்டல்

இதையும் சேர்த்து இதுவரை நடைபெற்ற 4 எஸ்ஏ20 தொடர்களிலும் ஜேஎஸ்கே அணி 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சாதனை படைப்பது. அதே போல தென்னாப்பிரிக்காவில் இதுவரை நடந்த 4 எஸ்ஏ20 தொடர்களிலும் பிளே ஆஃப் தகுதி பெற்றுள்ள ஜேஎஸ்கே அணி சிஎஸ்கே பெயரைக் காப்பாற்றும் வகையில் அசத்துகிறது என்றால் மிகையாகாது.

Advertisement