இது டென்னிஸ் இல்ல.. ஃபார்முக்கு வர அதை நான் மாற்றவும் விரும்பல.. இந்திய அணியே முக்கியம்.. சூரியகுமார் ஓப்பன்டாக்

Suryakumar Yadav
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரில் வென்று ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகியுள்ளது.

விரைவில் துவங்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு நோக்கத்திலும் நடைபெறும் அத்தொடரில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறும் அவர் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். எனவே உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதற்கு அவர் ஃபார்முக்கு திரும்ப போது அவசியமாகிறது.

- Advertisement -

இது டென்னிஸ் இல்லை:

அதற்காக ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக விளையாடி செட்டிலான பின் அதிரடியை துவக்குமாறு அவருக்கு சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் ஆலோசனை தெரிவித்தனர். இந்நிலையில் கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார். அதில் அனைவரும் சிறப்பாக விளையாடினால் தான் வெற்றி பெற முடியும் என்பதால் தம்முடைய ஆட்டத்தை மாற்ற வேண்டியதில்லை என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கடினமாக உழைத்து வரும் தமக்கு ரன்கள் வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் நன்றாக பேட்டிங் செய்வதால் நிச்சயமாக ரன்கள் வரும். அதே சமயம் அதற்காக நான் விஷயங்களை வித்தியாசமாக செய்ய விரும்பவில்லை. கடந்த 3 – 4 வருடங்களாக எனக்கு வெற்றிகளைக் கொடுத்த என்னுடைய அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை. இப்போதும் அதே மாதிரியாக பேட்டிங் செய்ய விரும்புகிறேன்”

- Advertisement -

மாற்றவும் விரும்பவில்லை:

“நல்ல ஆட்டங்கள் வந்தால் அதை எடுத்துக் கொள்வேன். இல்லையென்றால் மீண்டும் உழைத்து கம்பேக் கொடுப்பேன். இது ஒன்றும் டேபிள் டென்னிஸ் போல தனிநபர் விளையாட்டு கிடையாது. அணி விளையாட்டு. அதனால் அணி எப்படி விளையாடுகிறது என்பதைப் பார்ப்பதே என்னுடைய முதல் வேலை. ஒருவேளை அணி நன்றாக விளையாடி வெற்றி பெற்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. அதனுடன் சேர்ந்து என்னுடைய ஆட்டமும் ஜொலிப்பது சிறந்தது. இல்லையென்றாலும் பரவாயில்லை”

இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை.. திலக் வர்மா இடத்தில் ஆடப்போவது இவர்தான் – உறுதிசெய்த சூரியகுமார் யாதவ்

“கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள எனக்கு எங்கள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அணி விளையாட்டில் சொந்த சாதனைகளுக்கு இடமில்லை. அனைவரும் சிறப்பாக விளையாடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதுவே அணியின் சூழலுக்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். அதையே நான் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement