இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்
அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது விளையாடி முடித்திருந்தது. அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. நியூசிலாந்து அணியிடம் கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்திருந்தனர்.
திலக் வர்மாவுக்கு பதிலா இவர்தான் விளையாடுவார் : சூரியகுமார் யாதவ் உறுதி
அதோடு இந்த தோல்வி மிகப்பெரிய அளவில் இந்திய அணியின் மீது விமர்சனமாகவும் மாறியது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாகவும், எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாகவும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டியில் காயமடைந்த திலக் வர்மாவிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்றும் இஷான் கிஷன் தான் 3 ஆம் இடத்தில் விளையாடுவார் என்றும் சூரியகுமார் யாதவ் உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஷ்ரேயாஸ் ஐயரை நாங்கள் முதல் போட்டியில் விளையாட வைக்க மாட்டோம். ஏனெனில் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷனை விளையாட வைக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் அவர்தான் எங்களுடைய முதல் தேர்வு. அதோடு 20 உலக கோப்பை அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளதால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவதற்கு தகுதியானவர்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தரம் குறைக்கும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ
சில காலமாகவே இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கும் அவர் மீண்டும் எவ்வாறு ஆடப்போகிறார்? என்பதை காண காத்திருக்கிறோம். தற்போதைய இந்திய டி20 அணியில் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறாதது வருத்தமாகவே உள்ளதாகவும் சூரியகுமார் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



