ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தரம் குறைக்கும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

ROKO
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஆண்டுதோறும் வீரர்களின் திறமைக்கு ஏற்ப மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை ஒரு பெரிய மாற்றத்துடன் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பல்வேறு நட்சத்திர வீரர்களின் தரம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ரோஹித் மற்றும் விராட் ஆகியோருக்கு ஏற்படவுள்ள பின்னடைவு :

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ – ஏ ப்ளஸ், ஏ, பி, சி ஆகிய பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தது. ஆனால் தற்போதைய அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினரின் அறிவுறுத்தலின் படி இனி ஏ, பி, சி, டி என 4 ஒப்பந்த வகைகளே இருக்கும் என்றும் ஏ ப்ளஸ் பிரிவு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இருந்தாலும் பி.சி.சி.ஐ-யை தான் இதற்கான உறுதியான முடிவை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த புதிய ஒப்பந்த பட்டியலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே ஏ+ பிரிவில் இடம் பெற்றிருந்த அவர்கள் தற்போது இரண்டு வடிவான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் பி அல்லது சி பிரிவிற்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அப்படி அவர்களது தரம் குறைக்கப்பட்டால் அவர்களது ஆண்டு வருமானம் 3 கோடி வரை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த புதிய ஒப்பந்த பட்டியலின் உயர் பிரிவில் சுப்மன் கில், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர்களுக்கு அடுத்துள்ள வீரர்கள் அவர்களின் தகுதிக்கேற்ப அடுத்த அடுத்த பிரிவுகளில் மற்ற வீரரர்கள் இடம் பெறுவார்கள் என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க : ரோஹித் மற்றும் விராட் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் – நிகழ்த்தவுள்ள சாதனை

புதிதாக வெளியாகவுள்ள மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 10 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், டி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 3 கோடி என தனித்தனியே சம்பளத்தை நிர்ணயிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement