இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜனவரி 21-ஆம் தேதியான நாளை நாக்பூர் நகரில் துவங்குகிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் கடைசி டி20 தொடர் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
3 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் நிகழ்த்தவுள்ள சாதனை :
ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியானது இந்த டி20 தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. அதேவேளையில் இந்திய அணியை டி20 போட்டிகளிலும் வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட நியூசிலாந்து அணியும் தயாராகி வருகிறது. இதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் சூரியகுமார் யாதவ் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2788 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் அவர் 212 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 3000 ரன்களை பூர்த்தி செய்ய மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். குறிப்பாக ரோகித் சர்மா இந்திய அணிக்காக 159 டி20 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 125 டி20 போட்டிகளில் விளையாடி 4188 ரன்களை குவித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க : இந்தியா நியூசிலாந்து டி20 தொடரில் நட்சத்திர வீரர் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – வெளியான தகவல்
அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் சூரியகுமார் யாதவ் மேலும் 212 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை பூர்த்தி செய்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



