இந்தியா நியூசிலாந்து டி20 தொடரில் நட்சத்திர வீரர் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – வெளியான தகவல்

IND vs NZ
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தது. அந்த தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது சில விமர்சனங்களும் இந்த தோல்விக்கு பிறகு எழுந்திருந்தன.

நட்சத்திர வீரர் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜனவரி 21-ஆம் தேதி நாளை நாக்பூர் நகரில் துவங்குகிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த தொடரானது இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மைக்கல் பிரேஸ்வெல் முதல் மூன்று போட்டிகள் வரை விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கேப்டனாக பங்கேற்று விளையாடியிருந்த அவர் மூன்றாவது போட்டியின் போது இடது காலில் கனுக்கால் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கிறிஸ்டியன் கிளார்க் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக அணியுடன் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இருப்பிடம் காயம் சில நாட்களில் குணமடையும் பட்சத்தில் அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : மைக்கல் பிரேஸ்வெல் தற்போது நியூசிலாந்து அணியின் மருத்துவக்குழு கண்காணிப்பிற்கு கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : திலக் வர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. டி20 உ.கோ தொடரில் விளையாடுவாரா? – விவரம் இதோ

அவருடைய காயத்தை நாங்கள் முறைப்படி கண்காணித்து வருகிறோம். விரைவில் அவர் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் அவர் இந்த டி20 தொடரில் விளையாடுவார். இல்லையெனில் தேவையான ஓய்வு அவருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement