விராட் கோலியை விட ரோஹித் சர்மா இந்த விடயத்தில் பெஸ்ட்.. அதை நான் பாத்திருக்கேன் – முன்னாள் பாக் வீரர் பேட்டி

Sohail-Khan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நவீன கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி வருவதால் நட்சத்திர அந்தஸ்துடன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையை பெற்று வருகின்றனர்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங் விதம் இதுதான் :

அதேபோன்று தற்போது இருவருமே 35 வயதை கடந்த நிலையில் இன்றளவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாக கூறி தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மலை போல் ரன்களை குவித்து வைத்துள்ளதால் ரோஹித்தை விட சற்று ஒரு படி மேல் சிறந்த பேட்ஸ்மேன் என்று சிலர் கூறி வருகின்றனர். அதேபோன்று ரோகித்தும் அட்டகாசமான பேட்ஸ்மேன் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் பேட்டிங் டைமிங் சிறந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய் அவர் கூறுகையில் : விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன்.

- Advertisement -

ஆனால் ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். ஏனெனில் உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனை விட ரோகித் சர்மாவிடம் நல்ல டைமிங் இருக்கிறது. அவர் எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் தாமதமாக விளையாடக்கூடியவர். விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியை வைத்து ரன்களை குவிக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இடம்பிடித்தும் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படாத சர்பராஸ் கான் – என்ன காரணம்?

அதாவது ஒரு ரன் எடுத்தால் மீண்டும் மற்றொரு ரன் ஓட அவர் எப்பொழுதுமே தயாராக இருப்பார். ஆனால் ரோஹித் அப்படி கிடையாது ஒரு ரன் அடித்து விட்டால் அதற்கு அடுத்து பந்துவீச்சாளரை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவிப்பார். என்னை பொறுத்தவரை விராட் கோலியை விட டைமிங் செய்வதில் ரோகித் சர்மா சிறந்தவர் என சோஹைல் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement