விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 விளையாடததற்கு உண்மை காரணம் – என்ன தெரியுமா?

Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஜனவரி 11-ம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 14-ம் தேதி இன்று இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி மீண்டும் டி20 அணியில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த விராட் கோலி மீண்டும் எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அதனால் அவருக்கு இந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விராட் கோலியும் இந்த டி20 தொடரில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறார். இருப்பினும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது விராட் கோலி ஏன் விளையாடவில்லை? என்பது குறித்த தகவல் அப்போது வெளியாகவில்லை.

- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் மட்டும் : விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்து இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி முதல் டி20 போட்டியில் விளையாடாததற்கு உண்மை காரணம்? என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : அவரு பேட்டிங் பண்றத பாத்தா அப்படியே நான் ஆடுறே மாதிரியே இருக்கு.. இளம்வீரரை மனதார பாராட்டிய – யுவ்ராஜ் சிங்

அதன்படி ஜனவரி 11-ஆம் தேதி தனது மகள் வாமிகாவின் மூன்றாவது பிறந்த நாளை தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் கொண்டாடுவதற்காகவே அவர் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும் அதனை முடித்த அவர் தற்போது நேரடியாக இந்திய அணியுடன் இணைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement