
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்ததை அடுத்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 25ஆம் தேதி துவங்கிய இந்த முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நான்காவது நாளில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, ஷமி, பண்ட் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அதேவேளையில் விராட் கோலியும் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் உள்ளதால் தற்காலிக கேப்டனாக ரஹானே செயல்பட்டு வருகிறார். இப்படி முற்றிலும் மாறுபட்ட இந்திய அணி இந்த போட்டியில் விளையாடி வருவது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப்பட்ட என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விஹாரி மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் தென்னாபிரிக்க நாட்டிற்கு இந்திய ஏ அணியுடன் பயணித்ததால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு பேக்கப் வீரரை வேண்டும் என்றும் அவரை இந்திய அணி இனிவரும் காலத்தில் க்ரூம் (Groom) செய்ய இருப்பதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷ்ரேயாஸ் ஐயரை டெஸ்ட் போட்டிகளில் முயற்சிக்கவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க : என்ன நடந்தாலும் அவரை எடுத்தே தீருவோம். அவர்தான் அடுத்த மும்பை கேப்டன் – நிர்வாகம் விடாபிடி
இந்நிலையில் முதல் போட்டியில் கோலியின் ஓய்வின் காரணமாக அவர் அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த அவர் இரண்டாவது அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். அடுத்த இரண்டாவது போட்டியில் விராட்கோலி அணி இணையும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் நிலை என்ன என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.