IND vs WI : 5 ஆவது டி20 போட்டியில் ரோஹித், பண்ட், சூரியகுமார் யாதவ் விளையாடாதது ஏன்? – விளக்கம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

Shreyas Iyer IND vs WI

- Advertisement -

இந்த ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வெற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவு 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 64 ரன்களையும், தீபக் ஹூடா 38 ரன்களையும் குவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, துவக்க வீரர் சூரியகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் விளையாடவில்லை.

Bhuvi

இந்த நான்கு முக்கிய வீரர்களும் இந்த போட்டியில் விளையாடாததற்கான காரணத்தை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றி விட்டதாலும் அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறுவதாலும் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்த போட்டியில் அவர்கள் நால்வருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக இந்த தொடரில் விளையாடாத வீரர்களான இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு சற்று தடுமாறி வரும் வீரர்களுக்கும் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2021 டி20 உ.கோ தோற்ற பின் அணியை மொத்தமாக மாற்றியிருக்கோம், இந்தியாவின் புதிய அதிரடி பாதை பற்றி ரோஹித் சர்மா கருத்து

இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) இஷான் கிஷன், 2) ஷ்ரேயாஸ் ஐயர், 3) சஞ்சு சாம்சன், 4) ஹார்டிக் பாண்டியா, 5) தீபக் ஹூடா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் பட்டேல், 8) குல்தீப் யாதவ், 9) ஆவேஷ் கான், 10) ரவி பிஷ்னோய், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement