அவரை எப்படி வர்ணனை பெட்டியில் பேச விடலாம்? சர்பராஸ் கான் தந்தைக்கு எதிரான விமர்சனம் – நிர்வாகிகள் அளித்த பதில்

Sarfaraz-khan-dad
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ராஜ்கோட் நகரில் நேற்று பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் அறிமுகமானது பலருக்கு மத்தியிலும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் காரணமாக நேற்று இந்திய அணிக்காக விளையாடும் அறிமுக வாய்ப்பு கிடைத்தது.

இதன் காரணமாக மைதானத்தில் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்ட அவர் தனது தந்தை மற்றும் மனைவியுடன் சேர்ந்து அந்த மகிழ்ச்சியை கொண்டாடி இருந்தார். அதோடு தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் 66 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவர் ஜடேஜா செய்த தவறின் காரணமாக ரன் அவுட்டானது பலருக்கு மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது சிறப்பான ஆட்டத்திற்காக பாராட்டுக்களும் கிடைத்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சர்பராஸ் கானின் தந்தை நவுஷாத் கான் வர்ணனையாளர் அறையில் அமர்ந்து வர்ணனையாளர்களுடன் உரையாடியது தற்போது கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில் இப்படி இந்திய அணிக்காக அறிமுகமாகும் வீரர்களின் பெற்றோரை எப்படி வர்ணனை அறைக்குள் அனுமதிக்கலாம்? என்ற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக சில விடயங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் :

- Advertisement -

சர்பராஸ் கானின் தந்தை நவ்ஷாத் கான் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அவர் மும்பை அணிக்காக ஏகப்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி மும்பையில் தற்போது தலைசிறந்த கிரிக்கெட் பயிற்சியாளர்களின் ஒருவராகவும் நவ்ஷாத் கான் விளங்கி வருகிறார். அவரது கவனிப்பில் கீழ் ஏகப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் அவரிடம் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : டிராவிட், ஜெய் ஷா பேச்சை கேட்காமல் திமிராக நடந்து கொள்ளும் இஷான் கிசான்? காத்திருக்கும் ஆபத்து

எனவே அவரை ஒரு முன்னாள் வீரர் என்ற அடிப்படையிலும், ரஞ்சி போட்டிகளில் மாநில அணிக்காக விளையாடியவர் என்ற ஒரு வகையிலும் தான் வர்ணனை பெட்டிக்கு அழைத்து பேசியதாகவும் அவர் ஒரு கிரிக்கெட் தொடர்பான பணியை செய்து வருவதால் தான் அவரை அழைத்து சிறப்பித்ததாகவும் இந்த விடயத்திற்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement