டிராவிட், ஜெய் ஷா பேச்சை கேட்காமல் திமிராக நடந்து கொள்ளும் இஷான் கிசான்? காத்திருக்கும் ஆபத்து

Ishan Kishan 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎஸ் பரத் கீப்பிங் செய்வதில் நன்றாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். எனவே அவருக்கு பதிலாக கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி ஓரளவு அசத்திய இசான் கிசானை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்பியது.

ஆனால் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இசான் கிசான் சொந்த காரணங்களுக்காக விலகினார். அப்போதிலிருந்து அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். அதனால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக வேண்டுமெனில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடி கம்பேக் கொடுத்து ஃபார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார்.

- Advertisement -

மதிக்காத இஷான் கிசான்:
அதனால் பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்கிய ஹரியானாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்டுக்கு இசான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத அவர் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

அதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள இசான் கிசான் போன்ற இளம் வீரர்கள் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோபையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று முன்தினம் வெளிப்படையாக அறிவித்தார். குறிப்பாக தேர்வுக் குழு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுமாறு அறிவுறுத்தினால் அதை அனைத்து வீரர்களும் செய்தாக வேண்டும் என்றும் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

- Advertisement -

எனவே பிப்ரவரி 16ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராக துவங்கிய ரஞ்சிக்கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக கண்டிப்பாக இசான் கிசான் விளையாடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியிலும் விளையாடாத இசான் கிசான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா ஆகியோரின் பேச்சுக்களை மதிக்காமல் தட்டிக் கழிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: எப்படி அடிக்கிறாரு பாரு.. அவரை பாத்து கத்துக்கோ.. தடுமாறும் சுப்மன் கில்லுக்கு ரோஹித் அட்வைஸ்?

அப்படி முக்கிய நிர்வாகிகள் பேச்சைக் கேட்காமல் திமிராக நடந்து கொள்வதால் இஷான் கிசான் வருங்காலத்தில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவதில் தாமதமும் சிக்கலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை புறக்கணித்ததால் ஹரிஷ் ரவூப் சம்பள ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வாரியம் சமீபத்தில் ரத்து செய்தது. அதே போன்ற நிலைமையை இசான் கிசானும் சந்திப்பதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement