எப்படி அடிக்கிறாரு பாரு.. அவரை பாத்து கத்துக்கோ.. தடுமாறும் சுப்மன் கில்லுக்கு ரோஹித் அட்வைஸ்?

Rohit Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் குவித்து அசத்தியது.

குறிப்பாக ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் படிடார் 5 என மூன்று இளம் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 33/3 என்ற சுமாரான துவக்கத்தைப் பெற்று இந்தியா தடுமாறியது. இருப்பினும் எதிர்புறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 131 ரன்கள் விளாசி இந்தியாவின் சரிவை சரி செய்தார்.

- Advertisement -

கில்லுக்கு அறிவுரை:
அவருக்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டரில் வந்த சர்பராஸ் தான் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து மொத்தம் 62 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். அவர்களுடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் சதமடித்து 112 ரன்கள் குவித்தார். அதே போல லோயர் மிடில் ஆர்டரில் தன்னுடைய அறிமுக போட்டியில் அசத்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் 46 ரன்கள் குவித்தார்.

அவருடன் சேர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்து தன்னுடைய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான 37 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர்கள் அனைவரையும் விட பெரியளவில் பேட்டிங் தெரியாத ஜஸ்பிரித் பும்ரா கடைசி விக்கெட்டுக்கு சிராஜுடன் சேர்ந்து 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 26 (28) ரன்கள் விளாசி இந்தியாவை வலுப்படுத்தி இங்கிலாந்துக்கு தொல்லை கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக அவர் அடித்த 3 அட்டகாசமான பவுண்டரி மற்றும் 1 சிக்சரை பெவிலியனில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா சிரித்த முகத்துடன் கைதட்டி பார்த்தார். அப்போது தன்னுடைய அருகில் இருந்த சுப்மன் கில்லிடம் “டெயில் எண்டரான பும்ரா எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை பார். அவரைப் பார்த்தாவது கற்றுக்கொள்” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து பேசியது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 33/3 டூ 445.. இங்கிலாந்தை கடுப்பாக்கிய டெயில் எண்டர்கள்.. 1998 விட அதிக ஸ்கோர் குவித்த இந்தியா

ஏனெனில் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் கில் இத்தொடரின் முதல் 3 இன்னிங்க்ஸில் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் இரண்டாவது போட்டியின் கடைசி இன்னிங்ஸில் முக்கியமான 104 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் பங்காற்றினார். அதனால் ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் மீண்டும் இப்போட்டியில் டக் அவுட்டாகி வேலையை காட்டினார். எனவே பும்ராவை பார்த்து கற்றுக்கொள் என்ற வகையில் அவருக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கியதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Advertisement