சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக கருதப்படும் பாகிஸ்தான் சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறது. குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பரம எதிரி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணிகளை தெறிக்க விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் ஹரிஷ் ரவூப் நல்ல லைன், லென்த்தை பின்பற்றாமல் ரன்களை வாரி வழங்கி வருகிறார். முன்னதாக உலகக் கோப்பை முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.
முக்கிய தடை:
அதை விட அந்தத் தொடரில் நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ஹரிஷ் ரவூப்க்கு தேர்வுக் குழு தலைவர் வகாப் ரியாஸ் வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர் அதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பேஷ் டி20 தொடரில் பணத்துக்காக விளையாடச் சென்றார். மறுபுறம் ஹரிஷ் ரவூப் இல்லாதது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் படுதோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட மறுப்பு தெரிவித்த ஹரிஷ் ஃரவூப்பின் மத்திய சம்பள ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் வாரியம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக காயம் எதுவும் ஏற்படாத நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாததற்கு ஹாரிஸ் ரவூப் கொடுத்த காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருப்திகரமாக இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது.
எனவே கடந்த டிசம்பர் 1 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை அவருடைய சம்பள ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நாட்டுக்காக முக்கிய தொடரில் விளையாட மறுப்பு தெரிவித்த ஹரிஷ் ரவூப் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கும் பாகிஸ்தான் வாரியம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: 33/3 டூ 445.. இங்கிலாந்தை கடுப்பாக்கிய டெயில் எண்டர்கள்.. 1998 விட அதிக ஸ்கோர் குவித்த இந்தியா
அதாவது ஜூன் மாதம் வரை வெளிநாட்டு டி20 தொடர்களில் அவர் விளையாடுவதற்கு என்ஒசி சான்றிதழ் வழங்கப்படாது என்று பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது. மொத்தத்தில் பாபர் அசாமுக்கு நிகரான நட்சத்திர அந்தஸ்தை கொண்டிருந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்ததால் ஹரிஷ் ஃரவூப் மீது பாகிஸ்தான் வாரியம் அதிரடியான நடவடிக்கையை ஏற்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.