33/3 டூ 445.. இங்கிலாந்தை கடுப்பாக்கிய டெயில் எண்டர்கள்.. 1998 விட அதிக ஸ்கோர் குவித்த இந்தியா

IND vs ENG 33
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 326/5 ரன்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் படிடார் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 33/3 என இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஆனால் எதிர்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா முதல் நாளிலேயே அபாரமான சதமடித்து 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக முதல் 2 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காததால் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து வந்த சர்பராஸ்கான் அறிமுக போட்டியிலேயே அதிரடியாக 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து 62 ரன்கள் போது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். மறுபுறம் அவர்களுடன் சேர்ந்து தன்னுடைய சொந்த ஊரில் சிறப்பாக விளையாடிய ஜடேஜாவும் சதமடித்து 110 ரன்கள் குவித்து இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவினார். அந்த நிலையில் இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 2 ரன் மட்டுமே எடுத்த அவர் ஜோ ரூட் சுழலில் சிக்கினார்.

அதே போல குல்தீப் யாதவும் 4 ரன்களில் அவுட்டானார். அப்போது அறிமுக போட்டியில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தனர். அந்த வகையில் 8வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இங்கிலாந்தை கடுப்பாக்கிய அந்த ஜோடியில் அஸ்வினை 37 ரன்களில் அவுட்டாக்கிய ரீகன் அஹ்மத் அறிமுகப் போட்டியில் அரை சதமடிக்க விடாமல் துருவ் ஜூரேலையும் 46 ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அப்போது வந்த பும்ரா பேட்டை அட்டகாசமாக சுழற்றி முக்கியமான 26 ரன்களும் சிராஜ் 3* ரன்களும் எடுத்து கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு தொல்லையாக அமைந்தினர். இறுதியில் ஒரு வழியாக இந்தியாவை 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ் அனுப்புன அந்த ஒரு மெசேஜ்னால தான் நான் நேர்ல வந்தேன் – சர்பராஸ் கானின் தந்தை பேட்டி

அந்த வகையில் 33/3 என சரிந்த இந்தியா கடைசியில் 445 ரன்கள் குவித்து அசத்தியது. அதை விட இப்படி தங்களுடைய சொந்த மண்ணில் முதலில் பேட்டிங் செய்த 445 ரன்கள் குவித்த எந்த போட்டியிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது கிடையாது. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 424 ரன்கள் எடுத்தும் தோற்றது. ஆனால் இப்போட்டியில் அதை விட 21 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்துள்ள இந்தியா கிட்டத்தட்ட வெற்றி ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement