சூரியகுமார் யாதவ் அனுப்புன அந்த ஒரு மெசேஜ்னால தான் நான் நேர்ல வந்தேன் – சர்பராஸ் கானின் தந்தை பேட்டி

Sarfaraz-and-SKY
- Advertisement -

மும்பையை சேர்ந்த 26 வயதான இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் கடந்த சில ஆண்டுகளாகவே ரஞ்சி கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் அவருக்கு இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய டெஸ்ட் அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த வேளையில் ஒரு வழியாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் நேற்று அறிமுகம் ஆனார்.

ராஜ்கோட் மைதானத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி நேற்று துவங்கிய இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி அவருக்கு முன்னாள் ஜாம்பவானான அணில் கும்ப்ளேவின் கையில் அறிமுக தொப்பி வழங்கப்பட்டது. முதல் தர கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் சராசரி வைத்திருந்த சர்பராஸ் கான் நேற்று தான் களமிறங்கிய முதல் இன்னிங்ஸ் இடையே 66 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இறுதியில் ஜெட்ஜாவின் தவறான அழைப்பு காரணமாக ரன் ஓட முற்பட்டு ஆட்டமிழந்த அவரிடம் ஜடேஜாவும் மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் சர்பராஸ் கானின் தந்தை நான் மைதானத்தில் நேரில் வந்து அவரது முதல் ஆட்டத்தை பார்ப்பதற்கு காரணமே சூரியகுமார் யாதவ் தான் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

எனது மகன் இந்திய அணிக்காக அறிமுகமாக போகிறார் என்பதை கேள்விப்பட்டதும் நான் நேரடியாக மைதானத்திற்கு வரக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஏனெனில் நான் நேரில் வந்து பார்க்கும்போது அவருக்கு தேவையில்லாத பிரஷர் ஏற்படும் என்று நினைத்தேன். அதோடு எனக்கு கொஞ்சம் உடல் நிலையும் சரியில்லாமல் இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய வீரரான சூரியகுமார் எனக்கு மெசேஜ் அனுப்பி அதில் : உங்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். உங்களுடைய மகன் இன்றைய போட்டியில் அறிமுகமாக இருக்கிறார். எனவே நீங்கள் அவருடன் பக்கபலமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது என்னுடைய தாய் மற்றும் தந்தை மைதானத்திற்கு நேரில் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு அது இன்னும் தன்னம்பிக்கையை வழங்கி இருந்தது.

இதையும் படிங்க : கையை பிடித்து சர்பராஸ் கான் தந்தை வைத்த கோரிக்கை.. நெகிழ்ச்சியான பதிலை கொடுத்த ரோஹித் சர்மா

அதேபோன்று நீங்கள் அவருடன் இருந்தால்தான் அவருக்கும் அது பெரிய பலமாக இருக்கும், இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படாது என்று கூறியிருந்தார். அவர் அனுப்பிய அந்த மெசேஜ்ஜை பார்த்த உடனே நான் உடல்நிலை பற்றி கூட கவலைப்படாமல் நேரடியாக ராஜ்கோட் மைதானத்திற்கு வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement