IND vs WI : டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இருந்தாலும் டி20 டீமிலிருந்து கழட்டிவிடப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் – ஏன் தெரியுமா?

Ruturaj
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் டி20 தொடருக்கான வீரர்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்த வேளையில் நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐயின் மூலம் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹர்டிக் பாண்டியா தலைமையில் மொத்தம் 15 வீரர்களை கொண்ட இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணி அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Hardik-Pandya

- Advertisement -

முற்றிலுமாக இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு முற்றிலுமாக ஓய்வு வழங்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான அணியில் இடம்பெற்றிருந்த சென்னை அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இந்த டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது அனைவரது மத்தியிலும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் தனது திறமையை வெளிக்காட்டிய பிறகுதான் ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியான துவக்கத்தை அளித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் ஸ்பெசலிஸ்ட் ஓப்பனராக பார்க்கப்பட்டு வரும் வேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம்பெற்ற அவர் இந்த டி20 தொடரில் இடம்பெறாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Ruturaj-Gaikwad

இந்நிலையில் இப்படி டி20 இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாததற்கு மற்றொரு காரணமும் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த காரணம் யாதெனில் : ஏற்கனவே இந்திய அணியில் சுப்மன் கில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நிலையான இடத்தை பிடித்து விட்டார் என்பதனால் ஒரு துவக்க வீரருக்கான இடம் அவரால் பூர்த்தி செய்யப்படும்.

- Advertisement -

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் வலது கை, இடது கை ஓப்பனர்கள் வேண்டும் என்பதினால் தற்போதைய டி20 அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரில் ஒருவர் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக களமிறங்குவார்கள்.

இதையும் படிங்க : IND vs WI : இந்திய டி20 அணியில் இவருக்கு ஏன் தரல. தப்பு தப்பா தான் டீம் செலக்ட் பண்ணுவீங்களா? – ரசிகர்கள் கோபம்

இப்படி ஏற்கனவே மூன்று துவக்க வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளதால் கூடுதல் துவக்க வீரரை சேர்ப்பதை காட்டிலும் மிடில் ஆர்டரில் வீரர்களை சேர்க்கலாம் என்பதன் காரணமாகவே ருதுராஜ் கெய்க்வாட் கழட்டிவிடப்பட்டதாக தெரிகிறது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது 16 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 590 ரன்களை குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement