IND vs WI : இந்திய டி20 அணியில் இவருக்கு ஏன் தரல. தப்பு தப்பா தான் டீம் செலக்ட் பண்ணுவீங்களா? – ரசிகர்கள் கோபம்

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது அவர்கள் வெஸ்ட் நாட்டிற்கு சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IND vs WI T20I

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களுக்கு பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியை ஹார்டிக் பாண்டியா தலைமையில் நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஃபினிஷராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.

Rinku Singh 1

ஏனெனில் கொல்கத்தா அணிக்காக இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருந்த ரிங்கு சிங் மிகச்சிறந்த பினிஷராக உருவெடுத்துள்ளார். எனவே விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் பின்வரிசையில் களமிறங்கி இவரை போன்று அதிரடியாக பேட்டிங் செய்யும் வீரர்கள் இல்லாத நிலையில் ரிங்கு சிங் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணி டாப் ஆர்டரை பலப்படுத்தும் பேட்ஸ்மேன்களையே தேர்வு செய்துள்ளதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதையும் படிங்க : மும்பை அரசியல் ஆரம்பம், முதல் தேர்விலேயே தரமான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காத அகர்கர் – ரசிகர்கள் கொந்தளிப்பு

அதோடு தேர்வுக்குழு தலைவராக அஜீத் அகார்கர் தனது முதல் அணியை தேர்வு செய்வதிலேயே தவறுகளை செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் அவரது இந்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement